Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் சமூக பரவல் மூலமாக மேலும் ஆயிரத்து 22 பேருக்கு தொற்று : பிராந்திய உள்ளூர் பகுதிகளான Byron Shire, Kempsey மற்றும் Tweed-ல் ஒரு வாரம் முடக்க நிலை அறிவிப்பு

Another 22,000 infected by community outbreak in New South Wales. One-week shutdown notice in regional localities Byron Shire, Kempsey and Tweed

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் முடக்க நிலைகள் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென சமூக பரவல் மூலமாக ஆயிரத்து 22 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 6 பேர் தடுப்பூசி செலுத்தவில்லை என்றும், முறையே 50, 60 வயதில் ஒவ்வொருவரும், 70 வயதில் இரண்டு பேரும், 80 மற்றும் 90 வயதுகளில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் சிட்னியில் இருந்து நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்த நிலையில் அவர் மூலமாகவே தொற்று பரவியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து பிராந்திய உள்ளூர் பகுதிகளாக உள்ள Byron Shire, Kempsey மற்றும் Tweed ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை முதல் ஏழு நாட்களுக்கு முடக்க நிலை அமல் படுத்தப் படுவதாக நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் Brad Hazzard அறிவித்துள்ளார்.

Another 22,000 infected by community outbreak in New South Wales. One-week shutdown notice in regional localities Byron Shire, Kempsey and Tweed.டெல்டா வகை வைரஸ் பரவத் தொடங்கிய பின்னர் 48 ஆயிரத்து 600 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் 255 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்ததாகவும் சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் 1266 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் 244 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தற்போது வரை 82.5 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டு உள்ளதாகவும், 53% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தி கொண்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக வீட்டில் மூன்று பேர் வரை நண்பர்கள் ஒன்று கூடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது உள்ளிட்ட விஷயங்களில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்தும் பட்சத்தில் விரைவில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வரலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் Brad Hazzard நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Link Source: https://bit.ly/2W6phzO