தென்கிழக்குப் பகுதியான லாயோஸ் என்கிற நாட்டிலுள்ள குகையில் ஒரு பல்லின் படிமத்தை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். இது இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கருதப்படும் டெனிசோவன் மனித இனத்தைச் சேர்ந்த இளம்பெண்ணின் பற்கள் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்தது.
டெனிசோவன் மனித இனம் என்பது நியாண்டதால் மனிதர்களின் சகோதர பரம்பரையினர் என்று அறியப்படுகிறது. இதுவரை அவர்களுடைய எலும்பு படிமங்கள் சைபிரியா மற்றும் இமாலய மலை என குளிரிந்த நாடுகளில் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெப்பமண்டல மழைக்காடுகளை கொண்டுள்ள தென்கிழக்கு நாடுகளில் ஒன்றான லாவோஸில் டெனிசோவன் மனித இனத்தின் படிமம் கிடைத்துள்ளது இதுவே முதல்முறை. இதன்மூலம் அவர்கள் வெப்பமண்டல நாடுகள் மற்றும் குளிர்ந்த நாடுகளில் அவர்கள் வாழ்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சைபரியாவில் இருந்து 3800 கி.மீ தொலைவில் இந்த குகை அமைந்துள்ளது. முன்னதாக 2010-ம் ஆண்டு சைபிரியாவிலுள்ள அல்தாய் மலை தொடரில் டெனிசோவன் மனித இனத்தின் படிமம் கிடைத்தது. மேலும் சில எலும்பு படிமங்களும் அங்கே கிடைத்தன. திபெத்தில் உள்ள ஒரு குகையில் 1.60.000 ஆண்டுகளுக்கு முற்பட்ட டெனிசோவன் மனிதனின் தாடை எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.
பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் மானுடவியலாளரும் போர்டோ பல்கலைக்கழகத்தின் பணியாற்றுபவரான கிளிமெண்ட் ஜனோலி இதுகுறித்து பேசும்போது, இந்த ஆய்வு டெனிசோவன் மனிதர்கள் தெற்காசியாவிலும் இருந்திருக்கலாம் என்பது தெரிய வருகிறது. நவீன மனிதர்களும் டெனிசோவன்களும் தென்கிழக்கு ஆசியாவில் சந்தித்திருக்கலாம் என்று கூறும் மரபியலாளர்களின் முடிவுகளை இது உறுதி செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.
முந்தைய இரண்டு இடங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற படிமங்களுடன் இந்த பல் ஆய்வுக்குட்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் அழிந்துபோனதாக கருதப்படும் டெனிசோவன் மனித இனம் குறித்த உண்மைகள் அறிவியல் பூர்வமாக நிரூப்பிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.