Breaking News

குயின்ஸ்லாந்து மருத்துவமனையில் கொரோனா பாதித்த நபருக்கு அலர்ஜி காரணமாக ஏற்பட்ட Anaphylactic அதிர்ச்சி : உயிர்காக்கும் அவசர சிகிச்சை மேற்கொண்ட 10 மருத்துவ பணியாளர்களுக்கு குவியும் பாராட்டுகள்

Anaphylactic shock caused by an allergy to a corona victim at a Queensland hospital. Accumulated compliments to 10 medical staff who performed life-saving emergency treatment

குயின்ஸ்லாந்தில் உள்ள Sunshine Coast மருத்துவமனையில் கொரொனா தொற்று பாதித்த நபர் ஒருவருக்கு தீவிர அலர்ஜி பாதிப்பு காரணமாக திடீரென Anaphylactic அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. MRI ஸ்கேன் எடுக்கும் போது பயன்படுத்தப்பட்ட Contrast Dye காரணமாக எதிர்வினைகள் ஏற்பட்டு Anaphylactic அதிர்ச்சி உருவாகியுள்ளது.

Anaphylactic shock caused by an allergy to a corona victim at a Queenslandஇதனையடுத்து உடனடியாக அங்கிருந்த 10 மருத்துவப் பணியாளர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் உயிர் காக்கும் சிகிச்சைகளை வழங்கியுள்ளனர். இதனால் அவர் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் பிழைத்துள்ளார். கொரோனா தொற்று பாதித்த நபர் என்று தெரிந்தும் உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்காக 10 மருத்துவ பணியாளர்களும் வழக்கமாக அணியும் PPE Kit எதையும் அணியாமல் அவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில் உயிர் காக்கும் இந்த மருத்துவ சிகிச்சை அளித்தமைக்காக மருத்துவ பணியாளர்கள் 10 பேருக்கும் Sunshine Coast மருத்துவமனையின் தலைமை நிர்வாக இயக்குனர் டாக்டர் Andrew McDonald பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் விரைந்து நடவடிக்கை எடுத்து உயிர் காக்கும் சிகிச்சை அளித்தமைக்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் சிகிச்சை அளித்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர் தற்போது உடல் நலம் பெற்று மருத்துவமனையில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

chief health officer jeannette youngநிலையில் சிகிச்சை அளித்த 10 மருத்துவப் பணியாளர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் தேவையை உணர்ந்து கொண்டு அவருக்கான சிகிச்சையை உடனடியாக மருத்துவப் பணியாளர்கள் அளித்தமைக்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தலைமை மருத்துவ அதிகாரி Jeannette Young கூறியுள்ளார்.

அதேநேரத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளித்ததன் மூலமாக மருத்துவ பணியாளர்களுக்கு மருத்துவ ரீதியாக எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், அவர்கள் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் ஆக மட்டுமே கருதப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் Andrew McDonald தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் Sunshine Coast மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டார்களா என்பது தொடர்பான தகவலை குயின்ஸ்லாந்து சுகாதாரத்துறை வெளியிடவில்லை.

Link Source: https://ab.co/3qY45Xx