Breaking News

காலணி பெட்டிகளில் 24 கிலோ போதைப் பொருட்களை ஆஸ்திரேலியாவுக்குள் கடத்த முயன்ற குற்றத்திற்காக கனடா நாட்டைச் சேர்ந்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

An elderly Canadian man has been arrested for trying to smuggle 24kg of drugs into Australia in shoe boxes.

கடந்த புதன்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து மெல்பேர்னுகு விமானம் வழியாக கனடா நாட்டவர் வந்தார். அவரை சோதனை செய்து பார்த்த போது, அந்த நபர் கொண்டு வந்த காலணிப் பெட்டிகளில் போதைப் பொருள் பொட்டலங்கள் இருந்தன.

An elderly Canadian man has been arrested for trying to smuggle 24kg of drugs into Australia in shoe boxesஇதையடுத்து அதிகாரிகள் அவரை கைது செய்ய முயற்சித்தனர். ஆனால் அந்த நபர் தான் கொண்டு வந்தது உப்பு என்று கூறி சாதித்தார். அதையடுத்து எல்லைப் பாதுகாப்பு படை போதை பொருளை சோதனை செய்தது. அது படிக மெத்தம்பேட்டமைன் என்கிற போதை பொருள் என்பது உறுதி செய்யப்பட்டது. சுமார் 24 கிலோ எடைக் கொண்ட இந்த போதை பொருள் பொட்டலங்கள் கள்ளச்சந்தையில் 22 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு பெறும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மீது போதை பொருள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

காவல்துறையினர் போதை பொருள் கடத்தி வந்த கனடா நாட்டு முதியவரின் அடையாளங்களை இதுவரை வெளியிடவில்லை. வரும் செப்டம்பர் 1-ம் தேதி இவருடைய குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது. அப்போது அந்த நபர் தொடர்பான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.