Breaking News

மாதவிடாய் கண்காணிப்பு செயலிகளை நீக்கும் அமெரிக்க பெண்கள்- காரணம் இதுதான்..!!

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அமெரிக்க பெண்கள் பலர் மாதவிடாய் கண்காணிப்பு செயலிகளை நீக்கி வருகின்றனர்.

American women removing menstrual monitoring processors - this is the reason

செயலியிலுள்ள தனிப்பட்ட விபரங்களை வைத்து தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடும் என அமெரிக்க பெண்கள் அச்சம்.

கருக்கலைப்பு செய்வது சட்டப்படி குற்றமாக்கப்பட்டுள்ளதால், தங்களுடைய தனிப்பட்ட விபரங்களை பாதுகாக்கும் விதமாக, கைப்பேசியிலுள்ள மாதவிடாய் கண்காணிப்பு செயலிகளை அமெரிக்க பெண்கள் நீக்கி வருகின்றனர்.

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை சட்டபூர்வமாக்கப்பட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு, அது தொடர்பான தீர்ப்பை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள அமெரிக்க பெண்கள் பலர், தங்களுடைய கைப்பேசிகளிலுள்ள மாதவிடாய் கண்காணிப்பு செயலிகளை நீக்கி வருவது தெரியவந்துள்ளது.

செயலிகளில் இடம்பெற்றுள்ள மாதவிடாய் விபரங்கள் தெரியவந்தால், சட்டம் ஒழுங்கு அதிகாரிகள் தங்களை கைது செய்ய நேரிடும் என்பதே பெண்களுடைய கவலையாக உள்ளது. ஒருவேளை செயலியிலுள்ள தகவல்களை அரசு நிறுவனங்கள் கைப்பற்றப்படும் பட்சத்தில், செயலிகளை நிர்வகிக்கும் நிர்வாகங்களுடன் தாங்களும் கைது செய்யப்படக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

ஆனால் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர்கள் இப்படி நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று கூறுகின்றனர். இதுபோன்ற செயலிகள் பயனுள்ள விரும்பும் பயனர்கள், அதனுடைய பயன்பாட்டை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்வது நல்லது என்று கூறுகின்றனர். அதேபோன்று செயலியை நிர்வகிக்கும் நிறுவனங்களும் எந்தவொரு தனிநபர் விபரங்களையும் அரசு நிறுவனங்களுக்கு வழங்காது. தங்களுடைய பாதுகாப்பு பாதிக்கப்படும் என அமெரிக்க பெண்கள் அஞ்சுவது தேவையற்றது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.