Breaking News

ஆஸ்திரேலியாவில் Covax 19 தடுப்பூசிக்கு அனுமதி பெறுவதற்கு இருந்த மாற்று வழிகள் : அனைத்தையும் மூடி தெற்கு ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை

Alternatives to the Covax 19 vaccine in Australia. The South Australian government's cover-up

தெற்கு ஆஸ்திரேலியாவின் தடுப்பூசி விதிகளில் இருந்து விலக்கு அளிக்க தடுப்பூசி சோதனையில் பங்கேற்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடிலெய்டை மையமாகக் கொண்ட ஆய்வாளர் Nikolai Petrovsky’s தயாரித்த Covax 19 தடுப்பூசிக்கு அனுமதி பெறுவது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அதற்கான அனைத்து வழிகளையும் தெற்கு ஆஸ்திரேலிய அரசு அடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் 7 லட்சத்து 50 ஆயிரம் டாலர் நிதி திரட்ட முடியும் என்று கூறப்படுகிறது.

Alternatives to the Covax 19 vaccine in Australia. The South Australian government's cover-up.ஆஸ்திரேலியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான Therapeutic Goods Administration TGA ஒப்புதல் அளித்த தடுப்பூசிகளை பயன்படுத்த வேண்டாம் என்றும், Covax 19 தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி வழங்கும் முடிவில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. நவம்பர் 8ம் தேதி வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதலின்படி தற்போது உள்ள covid-19 தடுப்பூசி பரிசோதனையின்போது மற்றுமொரு தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது என்பது முந்தைய சோதனையை பாதிக்கும் என்றும் அதே நேரத்தில் அதிலிருந்து அத்தியாவசிய பணியாளர்களுக்கு விளக்கு அளிக்கப்படுவதாக கூறப்பட்டது. குறிப்பாக முதியோர் பராமரிப்பாளர்கள், பள்ளிகள், குழந்தை பராமரிப்பாளர்கள், மாற்றுத்திறனாளி சேவைகள், பயணிகள் போக்குவரத்து மற்றும் சுகாதார சேவைகளுக்கு விலக்கு அளிக்க திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின் படி அந்த விலக்குகள் யாருக்கும் அளிக்கப்படவில்லை என்றும், புதிய தடுப்பூசி கான பரிசோதனைக்கு இருந்த அனைத்து மாற்று வழிகளும் அடைக்கப் படுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பேராசிரியர் Petrovsky, ஆஸ்திரேலிய அரசு கோவை x19 தடுப்பூசியை அனுமதிக்க டி ஜி ஏ விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் அவர்கள் வசூலிக்கும் தொகை குறித்து தெரிவித்துள்ளார். மருத்துவ பரிசோதனையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றும் பட்சத்தில் அனுமதி வழங்குவதில் சிக்கல் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேநேரத்தில் சுகாதாரத்துறை எவ்வித காரணங்களுக்காகவும் தடுப்பூசி பயன்பாட்டில் சமரசம் செய்து கொள்ளாத என்றும், பட்டியலில் காத்திருக்கும் காரணத்திற்காகவே அதை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெற்கு ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3GPXJjZ