Breaking News

குப்பைகளை கட்டுப்படுத்த பல மில்லியன் டாலர் ஒதுக்கீடு..!!

பல்லாராத் பகுதியிலுள்ள நிலப்பரப்பில் குவிந்து வரும் குப்பைகளை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் கடும் சவாலாக அமையும் என்று நகர நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Allocation of millions of dollars to control garbage

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிதியாண்டு அறிக்கையில் பல்லாராத்தில் குப்பைகள் குவிந்து வருவதை தடுக்க 2.3 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டது. குப்பைகள் போடுவது மக்களுக்கு சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அதை அகற்றுவதற்கான பணிகள் அசாதாரணமாக இருப்பதாக கவுன்சிலர் பெலிதா கோட்ஸ் கூறியுள்ளார்.

Allocation of millions of dollars to control garbage.அதாவது பல்லாராத் பகுதியில் சேரும் குப்பைகளை அகற்றுவதற்கு பல ஆயிரம் டாலர்கள் செலவாகின்றன. அதாவது ஒரு தனிநபர் போடும் குப்பையை மாற்ற, நபர் ஒருவருக்கு 26 டாலர்கள் வரை தேவைப்படுவதாக கவுன்சிலர் பெலிதா கோட்ஸ் தெரிவித்தார். பணமிருந்தால் மட்டுமே இந்த நகரத்தை தூய்மைப்படுத்த முடியும் என்று கூறியுள்ள அவர், பொதுமக்கள் பலர் குப்பைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஆனால் குப்பைகளை அகற்ற நகர நிர்வாகம் தங்களுடைய வரிபணத்தில் இருந்து 20 மில்லியன் டாலர்களை செலவிடுகிறது என்று மட்டும் கவலைப்படுவதாக அவர் வருத்தம் கூறினார்.

மறுசுழற்சி மையங்களை ஏற்படுத்துவதன் மூலம் குப்பைகள் சேகரிப்பை பெருமளவில் தடுக்க முடியும். ஆனால் அதற்கு மத்திய அரசின் உதவி முக்கியமாக தேவை என்று பல்லாராத் நகர நிர்வாகிகள் கூறுகின்றனர். பல்வேறு பொருட்களுக்கான மறுசுழற்சி மையங்களை ஏற்படுத்துவதன் மூலம் குப்பை அதிகாமாக சேரும் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று நிர்வாகிகள் கூறுகின்றனர்.