Breaking News

டிஜிட்டல் தடுப்பூசி பாஸ்போர்ட் சோதனையை ஏர் நியூசிலாந்து அறிமுகப்படுத்துகிறது !

Air New Zealand Introduces Digital Vaccine Passport Test between Auckland and Sydney

ஏர் நியூசிலாந்து விமான நிறுவனங்கள், பயணிகள் மற்றும் எல்லை பாதுகாப்பு ஊழியர்களுக்கு அவர்களுடைய உடல்நிலை மற்றும் Covid-19 தடுப்பூசி நிலையை பற்றி அறிவதற்காக டிஜிட்டல் பயண பாசை தர இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இது தொடர்பாக ,Air New Zealand chief digital officer Jennifer Sepull கூறுகையில், இந்த தடுப்பூசி பாஸ்போர்ட் என்று தொழில்துறை பணியாளர்களால் அழைக்கப்படும் இந்த திட்டம், பயணிகள் தங்களுடைய சுகாதாரம் பற்றிய செய்திகளை ஒரே இடத்தில் சேமிக்க முடியும். இது எல்லை மீண்டும் திறக்கும் போது உதவியாக இருக்கும். இந்த டிஜிட்டல் சுகாதார முறையை விமான நிறுவனத்துடன் பகிர பாதுகாப்பாகவும், எளிதாகவும இருக்கும்.

Air New Zealand Introduces Digital Vaccine Passportசர்வதேச விமான நிலைய சங்கம் உருவாக்கிய இந்த திட்டத்தை பின்பற்ற Etihad மற்றும் Emirates உள்ளிட்ட மற்ற விமான நிலையங்களும் பின்பற்ற உள்ளன. ஏப்ரல் மாத தொடக்கத்தில் டிஜிட்டல் பாஸ் முறையை Auckland மற்றும் Sydney விமானத்தில் சோதனை செய்ய Air New Zealand நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த சங்கத்தின் senior vice-president Nick Careen கூறுகையில், தடுப்பூசி போடும் பணி நடைபெறுவதால், சர்வதேச பயணம் மீண்டும் தொடங்கும் போது இந்த திட்டம் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும். பயணிகள் வழங்கும் சுகாதார செய்திகள் அவர்களுடைய தனியுரிமையை உறுதி செய்யும் என்றார்.

கடந்தஆண்டு மே மாதம் ஆஸ்திரேலியா நியூசிலாந்துடன் ஒரு வழி trans-Tasman பயண bubble-ஐ உருவாக்கியது. இதன் கீழ் எந்த ஒரு நியூசிலாந்து மக்களும் எந்த வித தனிமைப்படுத்தலும் இல்லாமல் ஆஸ்திரேலியாவின் உள்ளேயும், வெளியேயும் பயணம் செய்யலாம். மார்ச் மாத இறுதியில் நியூசிலாந்தும் ஆஸ்திரேலியர்களை தங்கள் நாட்டிற்குள் வர அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த இரு நாடுகளிலும் புதிய தொற்றுகள் இருப்பதால் இந்த ஒப்பந்தம் எப்பொழுது நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern திறப்பார் என்ற பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. உலகிலேயே முதன்முதலில் தன் எல்லையை மூடி கொரோனாவை விரட்ட நியூசிலாந்து எடுத்த முயற்சியை அனைவரும் பாராட்டினர்.

இது தொற்று தொடங்கியதிலிருந்து 2357 தொற்று மட்டுமே இருந்தது. மேலும் 26 பேர் மட்டுமே இறந்துள்ளதாக பதிவாகியுள்ளது. Air New Zealand தனது சோதனையை ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது.