Breaking News

மேற்கு ஆஸ்திரேலியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயம் : புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக 80% தடுப்பூசி செலுத்த திட்டம்

Aiming to vaccinate against corona in Western Australia. 80% vaccination plan before New Year celebration..

டிசம்பர் 31-ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக மேற்கு ஆஸ்திரேலியாவில் தகுதிவாய்ந்த 80 சதவீதம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டு இருப்பதாக தடுப்பூசி திட்ட கமாண்டர் Chris Dawson தெரிவித்துள்ளார்.

Aiming to vaccinate against corona in Western Australia. 80% vaccination plan before New Year celebration.16 வயதுக்கு மேற்பட்ட 70 சதவீதம் பேர் தங்களது முதல் டோஸ் தடுப்பு ஊசியை புதன்கிழமை செலுத்தி முடித்துள்ளனர். அதே நேரத்தில் மேலும் ஏராளமானோர் தங்களது தடுப்பூசியை செலுத்தி கொள்வதற்காக முன்பதிவு செய்துள்ள நிலையில் தடுப்பூசி திட்ட கமாண்டர் Chris Dawson
தெரிவித்ததன் அடிப்படையில் டிசம்பர் மாதத்திற்குள் 80% இலக்கை எட்ட முடியும் என்று சுகாதாரத் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் மேற்கு ஆஸ்திரேலியாவில் 50 சதவீதம் பேர் தங்களது 2 டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து தரப்பு மக்களும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதன் மூலமாகவே பல்வேறு கட்டுப்பாடுகளை விரைந்து தளர்த்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Aiming to vaccinate against corona in Western Australia. 80% vaccination plan before New Year celebrationஆஸ்திரேலியாவின் வடக்கு பிரதேச பகுதிகளில் மேற்கு ஆஸ்திரேலியாவில் மட்டுமே தற்போது குறைந்த அளவிலான தடுப்பூசி செலுத்த பட்டிருப்பதாகவும் அவர்கள் தங்களது இலக்கை விரைந்து எட்ட வேண்டும் என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்வேறு தரப்பு தலைவர்கள் 50 பேரை தடுப்பூசி திட்ட கமாண்டர் Chris Dawson சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவர்களோடு தொடர்புடைய மக்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் பட்சத்தில் குறிப்பிட்ட இலக்கிற்கான காலத்தில் 80 சதவீதத்தை தாண்ட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மூன்று மாத காலத்தில் பெரும்பாலும் தளர்த்தப்பட்ட முடக்க நிலையை மக்கள் அனுபவித்து வருவதாகவும், தடுப்பூசி ஒன்றே தற்போது அனைத்துக்குமான தீர்வாக இருப்பதாகவும் மேற்கு ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3BwqmQA