Breaking News

ஆஸ்திரேலியாவில் 2030 ம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்த்ததை 43 சதவீதமாக கட்டுப்படுத்துவது தொடர்பான இலக்கு : பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பான தொழிலாளர் கட்சியின் கொள்கை விளக்க குறிப்பு வெளியீடு

Aim to reduce carbon dioxide emissions in Australia to 43 percent by 2030. Labor Party policy outline on climate change response released

ஆஸ்திரேலியா அரசு பருவநிலை மாற்றம் தொடர்பாக இலக்கு நிர்ணயித்தது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கருத்து தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தொழிலாளர் கட்சி 2030ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை 43 சதவீதமாக கட்டுப்படுத்துவதற்கான தங்கள் கட்சியின் கொள்கை விளக்க அறிக்கையை ஆஸ்திரேலிய அரசுக்கு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் தொழிலாளர் கட்சி வெளியிட்டுள்ள கொள்கை விளக்கம் குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அறிக்கையில் அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை மேற் கொள்வதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் குறித்தும் விளக்கம் அளித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அரசின் பாதுகாப்பு நடைமுறைகளை கருத்தில்கொண்டு அதேபோன்ற செயல்பாடுகளை உள்ளடக்கிய கொள்கையை தொழிலாளர் கட்சியை உருவாக்கி உள்ளதாகவும், ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றும் நிறுவனங்களுக்கு அவர்கள் வெளியேற்றும் ஆய்வின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்வது வாயு வெளியேற்றத்தை குறைக்க வழிவகை செய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வர்த்தக கவுன்சில் இதனை 25 ஆயிரம் டன்னாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது.

அதேநேரத்தில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி மற்ற நாடுகளோடு ஒப்பிட்டு கரியமில வாயு வெளியேற்றத்தில் இலங்கை ஆஸ்திரேலியா குறிப்பிட்ட ஆண்டுகளில் எட்டிவிட முடியும் என்று கொள்கை விளக்க குறிப்பில் தெரிவித்துள்ளது.

Aim to reduce carbon dioxide emissions in Australia to 43 percent by 2030. Labor Party policy outline on climate change response released.தென்கொரியா, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகள் வெளியிட்டுள்ள வாயு வெளியேற்ற இலக்கு நிர்ணயம் என்பது 40 முதல் 46 சதவீதம் வரை இருப்பதாகவும் 2030ஆம் ஆண்டுக்குள் 43% என்ற இலக்கை ஆஸ்திரேலியா நிச்சயம் எட்டிவிட முடியும் என்றும் தொழிலாளர் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ள சில வழிகாட்டு நெறிமுறைகள் என்பது இலக்கை அடைய அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உதவிகரமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அரசின் நடவடிக்கைகளுக்கு தொழிலாளர் கட்சி எடுத்து வைத்துள்ள ஆலோசனைகள் மற்றும் படிகள் சரியான திசையை நோக்கி அழுத்த செல்லும் என்று UNSW பருவநிலை ஆராய்ச்சி மையத்தின் துணை இயக்குநர் டாக்டர். Steven Sherwood கூறியுள்ளார்.

பருவநிலை மாற்ற அமைப்புகள், வர்த்தக கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் தொழிலாளர் கட்சியின் கரியமில வாயு வெளியேற்றம் தொடர்பான கொள்கை விளக்கக் குறிப்பை வரவேற்றுள்ளனர். அதேநேரம் இதை சரியான முறையில் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உரிய காலத்தில் தொடங்க வேண்டும் என்றும் அப்போது தான் இலக்கை அடைய முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Link Source: https://bit.ly/31oDElb