Breaking News

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து ஆலோசனை.

சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அதிமுகவில் நிலவி வரும் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் தங்களது முடிவுகளை அறிவிக்க தயக்கம் காட்டி வந்தனர். இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் இடம் சசிகலா தொலைபேசியில் பேசி வந்ததும் விரைவில் கட்சியை தான் வழி நடத்த இருப்பதாகவும் அவர் கூறி வந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவர்களோடு முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, தளவாய்சுந்தரம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.

AIADMK coordinator O. Panneerselvam-Coordinator Edappadi Palanisamy meets Prime Minister Narendra Modi in person and consultantஅதிமுகவில் சசிகலாவின் தலையீடு, ஒற்றைத் தலைமை, தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி ஒதுக்கீடு, மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமாக முடிவெடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழர்கள் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து பிரதமரிடம் பேசியதாக தெரிவித்தார். அதேநேரத்தில் சசிகலா விவகாரம் உள்ளிட்ட அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

பின்னர் பிரமதரிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பான வரிவான அறிக்கையை அதிமுக வெளியிட்டது.

Link Source: shorturl.at/nu256