Breaking News

ட்வீட் பதிவிடப்பட்ட பிறகு, அதை எடிட் செய்து மாற்றுவதற்கான வசதியை பரிசோதித்து வருவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

After the tweet was posted, Twitter said it was testing the facility to edit and modify it.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது. முன்னதாக ட்விட்டரில் எடிட் தேர்வை இடம்பெறச் செய்வது குறித்து பிரபல தொழிலபதிபர் எலான் மஸ்க் ட்வீட் செய்து வாக்கு நடத்தினார்.

அதில் பலரும் இந்த வசதிக்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டு இருந்தனர். அதை தொடர்ந்து தான் ட்விட்டர் இந்த வசதியை அறிமுகம் செய்ய முனைப்பு காட்டி வருவதாக தகவல் பரவலாக வெளிவந்தன.

ஆனால் இதை ட்விட்டர் நிறுவனம் மறுத்துள்ளது. ஆரம்பம் முதலே இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும். தற்போது அது நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று ட்விட்டர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3DRKRtc