Breaking News

ஒமைக்ரான் விவகாரத்தில் ஆப்ரிக்க நாடுகளை பாகுபாடின்றி நடத்த வேண்டும் : ஆஸ்திரேலியாவுக்கு ஆப்ரிக்க நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் கோரிக்கை

African countries should treat non-discrimination in the Omicron issue. Top African officials urge Australia

தென்னாப்பிரிக்காவிலிருந்து பரவத் தொடங்கிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 9 ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஆஸ்திரேலியா தடை விதித்திருந்த நிலையில், இது மிகவும் பாகுபாடான நடவடிக்கை என்றும் தங்களையும் உரிய முறையில் நடத்த வேண்டும் என்றும் ஆப்பிரிக்க நாடுகளின் உயர் மட்ட அதிகாரிகள் ஆஸ்திரேலியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சர் Greg Hunt, அரசின் முடிவில் உறுதியாக இருப்பதாக கூறி வரும் நிலையில் ஆப்பிரிக்க நாடுகளின் உயர் மட்ட அதிகாரிகள் தடுப்பூசி மற்றும் பயண விவகாரத்தில் குறிப்பிட்ட 9 நாடுகளை ஒதுக்குவது சரியான நடவடிக்கை அல்ல என்றும் இதனை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

African countries should treat non-discrimination in the Omicron issue. Top African officials urge Australia.போட்ஸ்வானா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உயர்மட்ட ஆணையர்கள் தடுப்பூசி செலுத்திய நாடுகளையும் ஆஸ்திரேலியா தனிமைப்படுத்தாமல் அவர்களையும் சமமாக நடத்த வேண்டும் என்று கோரியுள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி தற்போது பரவத் தொடங்கியுள்ளது வைரஸ் பாதிப்பு தடுப்பூசி செலுத்தியவர்கள் செலுத்தாதவர்கள் என அனைவரையும் பாதித்து வருவதாகவும், எனவே இதில் எந்தவிதமான பாகுபாடும் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று தென் ஆப்பிரிக்க உயர்மட்ட ஆணையர் Van Schalkwyk கூறியுள்ளார். யாருக்கும் பாதுகாப்பற்ற சூழலே தற்போது நிலவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து தென்ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, நமீபியா ஜிம்பாப்வே, லெசெதோ உள்ளிட்ட 9 நாடுகளில் இருந்து பயணிகள் வர தடை விதித்த நிலையில், குறிப்பிட்ட உத்தரவுக்கும் உன் வருகை தந்தவர்கள் 14 நாட்கள் தங்களை விடுதிகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்க நாடுகளை மட்டும் ஆஸ்திரேலியா தனித்து நடத்துவது ஏற்றுக்கொள்ள இயலாதது என்று போட்ஸ்வானா உயர்மட்ட ஆணையர் Dorcas Makgato தெரிவித்துள்ளார்.

இதுவரை 42 நாடுகளில் 419 பேருக்கு புதிய வகை வைரஸ் ஆன மைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. பல்வேறு நாடுகள் தங்களது சர்வ தேச எல்லைகளை திட்டமிட்டிருந்த நிலையில் அதை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

Link Source: https://bit.ly/3xRpDZw