தாலிபான்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் வந்த நிலையில், தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவங்களுக்கு பிறகு அங்கிருந்து கிடைக்கும் விமானத்தில் பல்வேறு நாடுகளுக்கு புறப்படுவதற்கு ஆப்கன் மக்கள் தயாராகி வருகின்றனர்.
தொடக்கத்திலிருந்தே காபூலில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக ஆயிரக்கணக்கான மக்கள் விமானங்களில் புறப்பட்டு வருகின்றனர். ஒரு சிலர் தங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தோடு தந்தை தாய் சகோதரர்களை விட்டுவிட்டு ஒரு சிலரும் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு செல்கின்றனர்.
முன்னாள் மொழிபெயர்ப்பாளர் ஆன சாஹிம் மற்றும் அவரது குடும்பத்தினர் முதல் விமானத்தில் காபூலில் இருந்து ஆஸ்திரேலியாவின் பெர்த் வந்தடைந்தனர். 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு அவரது குடும்பத்தினர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் மெல்போர்ன் அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தங்களது புதிய வாழ்க்கையை அங்கு தொடங்கி உள்ளனர்.
ஆப்பிளில் இருந்து வெளியேறி ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். அவர்களது முக்கிய கடமையாக தங்களது குடும்ப உறுப்பினர்களை மீட்பதில் கவனம் செலுத்தி வருவதாக புகலிடம் கோருவோர் அமைப்பின் முதன்மை வழக்கறிஞர் Carolyn Graydon தெரிவித்துள்ளார்.
காபூல் விமான நிலையத்தில் தாலிபான்களின் தீவிர கட்டுப்பாடுகள் காரணமாக தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களை விட்டுவிட்டு தான் மட்டுமே அங்கிருந்து புறப்பட்டு வர நேர்ந்ததாகவும், துப்பாக்கி முனையில் அவர்கள் தங்களது குடும்பத்தினரை தடுத்து நிறுத்தியதாகவும் ஆஸ்திரேலியாவுக்கு அகதியாக புலம்பெயர்ந்துள்ள Amena கூறியுள்ளார். தன்னிடம் மட்டுமே விசா இருந்த நிலையில் தான் புறப்பட்டு விட்டதாகவும், தனது குடும்பத்தினர் ஆப்கானிஸ்தானின் ஊரக பகுதி யில் உள்ள வீட்டிற்கு கூட திரும்ப முடியாமல் விமான நிலையத்திலேயே பதுங்கி இருப்பதாக Amena வருத்தம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து தங்களது பெற்றோர் மற்றும் சகோதரர் சகோதரிகளை மீட்பதற்கான கோரிக்கையை புகலிடம் கோருவோர் அமைப்புக்கு முன்வைத்து வருகின்றனர்.
நாளொன்றுக்கு சுமார் 400 அழைப்புகள் புகலிடம் கோருவோர் அமைப்பிற்கு வருவதாகவும் தங்களது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோரை ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கக்கோரி அவர்கள் கண்ணீர் மல்க கேட்டுக் கொள்வதாக தலைமை வழக்கறிஞர் Carolyn Graydon தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் கடந்த ஆண்டுகளில் விண்ணப்பித்திருந்த 3 ஆயிரம் பேருக்கு விசா வழங்குவதற்கான உத்தரவை பிரதமர் ஸ்காட் மோரிசன் பிறப்பித்துள்ளார். மேலும் சிறப்பு அனுமதியின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் இருந்து ஆஸ்திரேலிய வருவதற்கான 13 ஆயிரத்து 750 அகதிகளுக்கான அனுமதியையும் அவர் வழங்கியுள்ளார்.
Link Source: https://bit.ly/3zT6zu9