Breaking News

ஆஸ்திரேலியாவில் மாடெர்னா தடுப்பூசிக்கான அனுமதி இன்னும் இரண்டு வாரங்களில் கிடைத்துவிடும்; செப்டம்பர் மத்தியில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும் என்று ஒன்றிய சுகாதார அமைச்சர் தகவல்

Admission to the Moderna vaccine in Australia will be available in two more weeks; The Union Health Ministry has announced that vaccination will begin in mid-September

ஆஸ்திரேலியாவில் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தடுப்பூசி நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பூஸ்டர் டோஸ் பயன்பாடு மற்றும் முதல் டோஸ் பயன்பாட்டிற்கான மாடர்னா தடுப்பூசிகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இது குறித்த பல்வேறு விவரங்களை வெளியிட்டு உள்ள ஒன்றியம் சுகாதார அமைச்சர் Greg Hunt மாடெர்னா தடுப்புக்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் Therapeutic Goods Administration அதிகாரபூர்வ ஒப்புதலுக்கு காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து 25 மில்லியன் டோஸ் மாடர்னா தடுப்பூசிகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும், முதல் ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் இந்த மாத இறுதியிலேயே கிடைத்துவிடும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

அடுத்தடுத்த மாதங்களில் அடுத்தடுத்து தொகுப்புகள் தொடர்ந்து கிடைக்கும் என்றும், முதல் டோஸ் பயன்பாட்டிற்கும் பூஸ்டர் பயன்பாட்டிற்கும் மாடர்னா தடுப்பூசிகளை பயன்படுத்தலாம் என்றும் ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Admission to the Moderna vaccine in Australia will be available in two more weeks; The Union Health Ministry has announced that vaccination will begin in mid-September.ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான மாகாணங்களில் டெல்டா வகை வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது அதே நேரத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது அந்த வகையில் மாடர்னா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தவுடன் அனைத்து தரப்பினரும் போட்டுக் கொள்ளும் வகையில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கான அனுமதி வழங்கும் தனி ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது.

நியூ சவுத் வேல்ஸ், சிட்னி மற்றும் விக்டோரியா உள்ளிட்ட மாகாணங்களில் பெருமளவில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் அம்மாகாண பிரியர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர் சுகாதாரத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கு ஏற்ப முடக்க நிலை நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பைசர மற்றும் மாடெர்னா தடுப்பூசி களுக்கான மூன்றாவது கட்ட அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படும் நிலையில் அவை செப்டம்பர் மாதத்தில் எளிதில் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3jAniLB