Breaking News

தெற்கு ஆஸ்திரேலியாவின் சுற்றுலா பகுதியில் இளம் பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்த விவகாரம் : அடிலெய்டை சேர்ந்த ஆண் ஒருவரை கைது செய்து போலீஸ் விசாரணை

Adelaide man arrested for allegedly taking pornographic photos of young women in a tourist area of ​​South Australia

தெற்கு ஆஸ்திரேலியாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா பகுதியான Brighton Jetty -ல் இளம் பெண்களின் கீழாடைகளை விலக்கி புகைப்படம் எடுத்ததாக புகார் எழுந்தது.

தொடர்ந்து பல்வேறு பெண்களிடம் இது போன்ற செயலில் ஈடுபட்ட நிலையில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபரின் உடமைகள் அந்த பகுதியில் இருந்ததாகவும் அதில் கேமரா ஒன்று இருந்து அதுவும் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அடிலெய்டை சேர்ந்த நபர் ஒருவர் தனது ஷூ-வில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை பயன்படுத்தி இளம் பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்ததை உறுதி செய்தனர்.

இதனை அடுத்து படம் பிடித்துக் நேரில் பார்த்த அடிலெய்டை சேர்ந்த 60 வயதான நபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Adelaide man arrested for allegedly taking pornographic photos of young women in a tourist area of ​​South Australia.சம்மந்தப்பட்ட நபரால் வேறு யாரேனும் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறார்களா என்பது குறித்தும், யார், யாரின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது என்ற விசாரணையை காவல்துறை மேற்கொண்டுள்ளது. அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு அந்த நபரின் அடையாளங்களை தெரிவித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் காவல்துறையிடம் தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

170 செ.மீ உயரமும், சராசரியான உடல் வாகும் கொண்ட அந்த நபர், மிக ஷார்ட்டாக முடிவெட்டி இருந்த்தாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளை நிற டி ஷர்ட், கருப்பு நிற கூலிங் க்ளாஸ், பேஸ்பால் தொப்பி, க்ரே நிற செருப்பு அணிந்திருந்ததாகவும் போலீஸ் தரப்பில் அடையாங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அடையாளங்களுடன் யாரேனும் அந்த நபரை பார்த்து இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும், குற்றச்செயல்களை தடுப்பதற்கும் உதவிபுரியும் வரும் சுற்றுலா பயணிகளையும் பொதுமக்களையும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Link Source: https://ab.co/3uZMxP0