Breaking News

அடிலேய்டு சிறுமி உயிரிழப்பு- குற்றவியல் புறக்கணிப்பு வழக்காக பதிவு..?

அடிலேய்டு சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான சூழல் பாதுகாப்பாக உள்ளதா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளதாக விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Adelaide girl's death - registered as a case of criminal neglect

கடந்த 15-ம் தேதி அடிலேய்டிலுள்ள வீட்டில் சிறுமி மயக்கநிலையில் கிடந்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த துணை மருத்துவக் குழு, சிறுமியை லைலன் மெக்வின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. பரிசோதனை செய்து பார்த்தபோது, சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் அடிலேய்டு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Adelaide girl's death - registered as a case of criminal neglect,இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு ஆஸ்திரேலியா காவல்துறை துணை ஆணையர் லிண்டா வில்லியம்ஸ், இறந்துபோன சிறுமி 6 வயதான சார்லி என்கிற தகவலை வெளியிட்டார். வடக்கிழக்கு அடிலேய்டிலுள்ள முன்னோ பெர்ரா என்கிற பகுதியில் தாயுடன் சார்லி வசித்து வந்துள்ளார். சிறுமி சார்லிக்கு 5 உடன்பிறந்தவர்கள் உள்ளனர் என்று கூறினார்.

 

தொடர்ந்து பேசிய அவர், பல்வேறு உடல்நலப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த சார்லி, உரிய பரமாரிப்பு இல்லாமல் தவித்து வந்துள்ளான். அதுவே சிறுமியின் மரணத்துக்கு காரணமாக அமைந்துவிட்டது. சார்லி இறந்துபோனதை அடுத்து, அவளுடைய அனைத்து சகோதர சகோதிரிகளும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். சிறுமி சார்லியின் மரணத்தில் அவர்களுக்கு ஏதேனும் தொடர்புள்ளதா என்கிற ரீதியில் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், சிறுமி சார்லியின் மரணத்திற்கான காரணத்தை அறிய பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்படவுள்ளது. முறையான பராமரிப்பு கிடைக்காமல் சிறுமி இறந்துபோனது தெரியவந்தால், குற்றவியல் புறக்கணிப்பு வழக்காக இது பதிவுசெய்யப்படும். குற்றம் உறுதியாகும் பட்சத்தில், அதிகப்பட்சமாக குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும். மாநில அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் சார்லி மரண வழக்கு விசாரிக்கப்படவுள்ளது என்று துணை ஆணையர் லிண்டா வில்லியம்ஸ் கூறினார்.