Breaking News

அடிலெய்ட் Brighton Cement நிறுவன நிதி மோசடி வழக்கு : மேலாளர் பல கோடி ரூபாய் மோசடி செய்ததை உறுதி செய்தது நீதிமன்றம்

Adelaide Brighton Cement Corporate Financial Fraud Case. Court confirms manager committed multi-crore fraud

2009 – 2017 காலகட்டத்தில் வாடிக்கையாளர் ஒருவருக்கு 32 மில்லியன் டாலர் மதிப்புள்ள சிமெண்ட் கான்கிரீட்டை 20 மில்லியன் டாலருக்கு மட்டுமே கொடுத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் , அடிலெய்ட் Brighton Cement நிறுவனத்தில் முறைகேடு செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தன் நிறுவனத்தில் மேலாளராக இருந்த Glenda Ivy Burgess குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.


வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக பணப் பலன்கள் கிடைக்காமல் கான்கிரீட் சப்ளை மூலமாக குறைவான பணத்திற்கு அதனை விற்று வந்ததும் அதன் மூலம் போலி கணக்குகளை காட்டி நிதி மோசடி செய்ததும் அம்பலமாகி இருப்பதாக வழக்கறிஞர் Peter Longson கூறியுள்ளார்.

Adelaide Brighton Cement Corporate Financial Fraud Case. Court confirms manager committed multi-crore fraud.அதே நேரத்தில் Glenda Ivy Burgess வங்கிக் கணக்குகளை காவல்துறையினர் முறையாக தணிக்கை செய்து வரும் நிலையில் அதில் பெரிய அளவில் எதுவும் முதலீடுகளோ அல்லது பண பரிவர்த்தனைகள் காணப்படவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளனர். கான்க்ரீட் சப்ளையில் கடன் கணக்கை காட்டி, அதை மற்ற வாடிக்கையாளர்களின் கணக்குகளில் வரவு வைத்து நிறுவனத்தின் நிதி சுமையை பல மடங்கு உயர்த்தியதற்கு காரணமாக Glenda Ivy Burgess இருந்திருக்கிறார் என்றும் வழக்கறிஞர் Longson கூறியுள்ளார்.

மோசடி செய்திருந்தால் அதற்கான பண பலனை அவர் அனுபவத்திருக்க வேண்டும் என்றும் அதற்கான எந்த சான்றும் இல்லை என்றும், சாதாரண காரிலேயே அவர் நீதிமன்றம் வந்துள்ளதாகவும் Glenda Ivy Burgess தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

நவம்பர் மாதத்தில் மீண்டும் வழக்கு விசாரணக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, Glenda Ivy Burgess பிணை வழங்கி உள்ளார். இந்த வழக்கு தொடர்பாட நீதிமன்றத்தின் உத்தரவை Brighton Cement நிறுவனம் வரவேற்றுள்ளது.

Link Source: https://ab.co/3kwT24U