Breaking News

சுகாதாரத்துறை அறிவிப்பின் படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13,776 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தலைநகரான சென்னையில் மட்டும் 3842 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 10,51,487. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 3,01,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில்
இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9,43,044.

சென்னையில் 3842 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற மாவட்டங்களில் 9,932 பேருக்குத் தொற்று உள்ளது.

தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 194 தனியார் ஆய்வகங்கள் என 263 ஆய்வகங்கள் உள்ளன.

According to the health department, 13,776 people have been diagnosed with corona in the last 24 hours in Tamil Naduஇந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு: தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 95,048.
இது வரை 2 கோடிக்கும் அதிகமானவர்களிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 78 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன.உயிரிழந்தவர்களில் 66 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள். எவ்வித பாதிப்பும் இல்லாதவர்கள் 12 பேர்.

தமிழகத்தில் கொரோனாவால் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.