சிங்கப்பூர் ஒரு வர்த்தக நகரமாக இருந்தாலும், அந்நாட்டில் சுமார் 57 லட்சம் பேர் குடிமக்களாக வசித்து வருகின்றனர்.
அவர்களில் 80% பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யீ குங் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த 80% பேருக்கும் இரண்டு டோஸ் போடப்பட்டிருப்பதாகவும், இது முக்கிய மைல்கல் என்றும் அவர் தன்னுடைய துறை அதிகாரிகளை பாராட்டியுள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் ஒரு முக்கிய நகர்வு என்று தெரிவித்துள்ள அமைச்சர் ஓங் யீ குங், கொரோனாவுடன் வாழ்கை முறையை அமைக்கும் முயற்சியில் மிக முக்கிய வெற்றியாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் பெரும்பாலானவர்களுக்கு பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. புற நகர் பகுதிகளில் இருந்த மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்த கடந்த ஜூலையில் அறிவிக்கப்பட்ட நடமாடும் தடுப்பூசி முகாம் நல்ல பலன் கொடுத்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 4300 குடிமக்களுக்கு வீடுகளிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், ஒவ்வொரு வாரமும் சுமார் 700க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருவதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஏராளமான மருத்துவர்கள், செவிலியர்கள் தானாக முன்வந்ததன் காரணமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றதாகவும், இதன் காரணமாக காத்திருப்பு நேரம் வெகுவாக குறைந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யீ குங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் 63,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 55 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 133 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/3yxZRbn