கடந்த 2019-ம் ஆண்டு காலநிலை மாற்றம் தொடர்பாக பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்த திட்டங்கள் குறித்த ஆவணங்கள் ஏபிசி ஊடகத்துக்கு கிடைத்தன. இதை நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு அளிக்க முடியாமல் போனது. அதன்காரணமாக இந்த விவகாரம் தொடர்பாக தீர்ப்பாயத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைகள் தற்போது ஏபிசி வெளியிட்டுள்ளது.
அதில் தொழில் துறை, அறிவியல், ஆற்றல் மற்றும் வளங்கள் துறைக்கான செயலர் ஜோ ஈவென்ஸ் தீர்ப்பாயத்திடம் தெரிவித்துள்ள கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. அதில் காலநிலை மாற்றம் என்பது மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய ஒன்று. ஆனால் பிரதமர் ஸ்காட் மோரீசன் மற்றும் துறை பிரதமர் பார்நாபி ஜாயிஸ் இடையே நடந்துவரும் உட்கட்சிபூசல் இதை கிடப்பில் போட வைத்துவிட்டது. எனினும் தொடர்ந்து இந்த அரசு காலநிலை மாற்றத்தை கவனத்துடன் கையாண்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
செயலர் ஜோ ஈவென்ஸ் கருத்தை பலரும் ஆமோதித்துள்ளனர். குறிப்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், காலநிலைமாற்றத்துக்கு எதிராக போராடுபவர்கள் உள்ளிட்டோர் அரசின் மெத்தன்ப்போக்கை கடுமையாக சாடியுள்ளனர். தற்போதைய அரசியல் தலைவர்களுக்கு தங்களுடைய பதவியை காத்துக் கொள்வதும் எதிர்க்கட்சிக்கு பதிலடி கொடுப்பதுமே பிரதான காரியமாகிவிட்டது.அவர்கள் மக்களையும் மண்ணையும் மறந்து வெகுகாலம் ஆகிவிட்டது என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தி வெளியானதை அடுத்து லிப்ரல் கட்சியைச் சேர்ந்த பெயர் கூற விரும்பாத ஒருவர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், வரும் 2050-ம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் காக்கப்படும். மனிதர்களுக்கும் பூமிக்கும் கேடுவிளைவிக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள லிப்ரல் கட்சி தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிட்டு வருகிறது. இதற்காக அரசின் விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.