Breaking News

பைசர் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 10 லட்சம் பைசர் தடுப்பூசிகள் ஆஸ்திரேலியா வந்தடைந்துள்ளன.

ஆஸ்திரேலியாவில் தற்போது 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

பல்வேறு மாகாணங்களில் அதிகரித்து வரும் தொற்று பரவலின் காரணமாக பொதுமக்களிடையே தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது.

தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்று மாகாண முதல்வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

About 10 lakh Pfizer vaccines have arrived in Australia under a contract with Pfizer,இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசு பைசர் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் சுமார் 1 லட்சம் தடுப்பூசிகள் பெர்த் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இதேபோல் சிட்னிக்கும் சுமார் 8 லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளது. இரு நகரமும் அண்மையில் ஏற்பட்டுள்ள தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ளது.

பைசர் தடுப்பூசியின் வருகையையொட்டி வரும் நாட்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்று கொரோனா தடுப்பூசி செயல் அதிகாரி John Frewen தெரிவித்துள்ளார். மேலும் கூடுதலாக 1300 பொது மருத்துவர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் ஜான் பெரவன் தெரிவித்துள்ளார்.

About 10 lakh Pfizer vaccines have arrived in Australia under a contract with Pfizer2021க்குள் சுமார் 40 லட்சம் தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஆஸ்திரேலிய அரசு பைசர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது மாகாணங்களில் ஒரு வாரத்திற்கு சராசரியாக 3 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி வருகையையொட்டி இந்த இலக்கு 10 லட்சமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

Link Source: https://ab.co/3rvlxTE