Breaking News

மெல்பேர்னில் உள்ள 200 வீடுகளுக்கு சூரிய எரிசக்தி மூலம் மின்சார தயாரிக்கப்பட்டு வழங்குவதற்கான திட்டம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

A project has been launched to provide solar-powered electricity to 200 households in Melbourne.

வடக்கு ஃபிட்ஸோரி என்கிற பகுதியில் துவங்கி வைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்துக்கு மாநில அரசு 11 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. தன்னார்வுள்ள நிறுவனமான யாரா எனர்ஜி அறக்கட்டளையின் முயற்சியால் இந்த திட்டம் செயல் வடிவம் பெற்றுள்ளது.

கடந்தாண்டு விக்டோரியாவிலுள்ள யாகானாந்த் என்கிற பகுதியில் வீடுகளுக்கு இதே திட்டம் வடிவில் மின்சார வழங்கப்பட்டுள்ளது. ஃபிட்ஸோரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்துக்கு 284 கிலோ வாட் மூலம் மின்சாரம் வழங்கபடுகிறது.

ஒரு பேட்டரிக்கு 1 மில்லியன் டாலர் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசாங்கம் மற்றும் தன்னார்வு அறக்கட்டளை மூலமாக வேண்டிய தொகை சேகரிக்கப்பட்டு இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.