Breaking News

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு நார்தன் டெரிட்டரி நீதிமன்றம் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A Northern Territory court has sentenced a man arrested in a sexual assault case to life in prison in Australia.

டார்வின் பகுதியைச் சேர்ந்த ஸ்டீவன் காஹூ லீடி (30) பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டார். இதுதொடர்பான வழக்கு நார்த்தன் டெரிட்டரி மாநில உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது.

கடந்த ஆகஸ்டு மாதம் ஸ்டீவன் காஹூ லீடி மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு, அவருக்கு 8 ஆண்டுகள் தண்டனை விதித்து மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து குற்றவாளி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. மேலும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் வழங்கப்பட்டு இருந்த 8 ஆண்டுகள் தண்டனை 11 ஆண்டுகளாக உயர்த்தி வழங்கப்பட்டது.

Link Source: https://ab.co/33UCmzX