Breaking News

தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மின்கம்பத்தில் மோதி உயிரிழப்பு : அடுத்த 24 மணி நேரத்தில் பெண் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்பு

தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரத்தின் அருகில் உள்ள Somerton பூங்காவில் மின்கம்பத்தில் மோதி மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

45 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் உயிரிழந்த நபர் குறித்த விவரங்கள் ஏதேனும் தெரிந்தால் அவர்கள் தாமாக முன்வந்து காவல்துறையினரிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Augusta Highway பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்த நிலையில் அவர் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டது.

அடுத்த 24 மணி நேரத்தில் அடிலெய்ட் பூங்காவில் மின்கம்பத்தில் மோதி 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்து இருக்கும் விவகாரம் காவல்துறையினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த ஓராண்டில் மட்டும் தெற்கு ஆஸ்திரேலியாவில் சாலை விபத்துக்கள் மூலமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

Somerton பூங்கா அருகில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் சடலத்தை முதலில் பார்த்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், இதற்கு முந்தைய விபத்துக்களின் அடிப்படையில் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் அடிலெய்ட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3hJXOet