Breaking News

போக்குவரத்து ஊழியர் மீது கார் மோதி உயிரிழப்பு ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட Jason Ruscoe என்பவரை சிறையில் அடைக்க மெல்போர்ன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து ஊழியர் Timmy Rakei மீது மோதிய வேகமாக வந்த கார் மோதியது. இந்த விபத்தில் Timmy Rakei சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உடன் பணிபுரிந்த Shaun Kilmartin என்ற ஊழியரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக ரூஸ்கோ என்பவரை கைது செய்த போலிசார் அவர் மீது 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். வேகமாக கார் ஓட்டுதல், உயிரிழப்பை ஏற்படுத்துதல், போக்குவரத்து விதிகளை மீறியது, உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தை இயக்கியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

A Melbourne court has ordered the jailing of Jason Ruscoe, who was arrested in connection with a car crash that killed a transport worker..பிராங்ஸ்டன் காவல் நிலையத்தில் இருந்து காணொளி வாயிலாக மெல்போர்ன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட Jason Ruscoe வலது கண்பகுதிக்கு கீழ் இரத்த காயமும், மூக்கில் இருந்து ரத்தம் கசிவதை பார்க்க முடிந்ததாக அவரின் வழக்கறிஞர் கரீன் ஷெரிடன் தெரிவித்துள்ளார். Jason Ruscoe காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதாகவும் அவரின் வழக்கறிஞர் கரீன் புகார் தெரிவித்துள்ளார். அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும், நீதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது. விபத்து ஏற்படுத்திய பிறகு சம்பவடத்தில் இருந்து தப்பிய Jason Ruscoe யை ஆஸ்லி போவல் என்பவர் தன்னுடைய வாகனத்தில் தப்ப உதவியதாக காவல்துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட இருவரும் தப்பிச்சென்றதாக கூறப்படும் எஸ்.யூ.வி ரக வாகனத்தை இன்னும் காவல்துறையினர் கண்டறியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Link Source: shorturl.at/tFIM8