Breaking News

தமிழகத்தில் மேலும் 24,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 21,72,751 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

A further 24,405 people have been confirmed infected with corona in Tamil Nadu. The number of cases has risen to 21,72,751 so far, according to the state health department.

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் மேலும் 24,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 21,72,751 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 32,221 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 18,66,660 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 460 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 25,665 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 213 பேரும், அரசு மருத்துவமனையில் 247 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 2062 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 511258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

A further 24,405 people have been confirmed infected with corona in Tamil Nadu. The number of cases has risen to 21,72,751 so far, according to the state health departmentதமிழகத்தில் இதுவரை 2,81,96,279 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,79,438 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2,80,426 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 12,78,486 பேர் ஆண்கள், தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 8,94,227 பேர் பெண்கள், தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 269 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.