Breaking News

விக்டோரியாவில் 423 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பலாரட் பகுதியில் இன்று இரவு முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

A first curfew has been declared in the Ballarat area tonight as 423 people have been confirmed infected in Victoria.

விக்டோரியாவின் பலாரட் பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று தொடர்பாக, பிரிமீயர் டேனியல் ஆண்ட்ரூஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதில் கடந்த 24 மணி நேரத்தில் விக்டோரியாவில் 423 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டதாகவும், 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

A first curfew has been declared in the Ballarat area tonight as 423 people have been confirmed infected in Victoria..54,649 நபர்களுக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், 41856 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்று கண்டறியப்பட்டவர்களில் 143 பேருக்கு தொற்று பரவலுக்கான தொடர்புகள் கண்டறியப்பட்டதாகவும், மற்றவர்கள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் மெல்போர்னில் 4 ஆம் நிலை ஊரடங்கு அமலில் உள்ளது. புறநகர் பகுதிகளில் செம்படம்பர் முதல் வாரத்தில் இருந்து தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு சில பகுதிகளில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அடுத்த கட்ட தடுப்பு நடவடிக்கைகளை வரும் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்க இருப்பதாக பிரீமியர் டேனியல் தெரிவித்துள்ளார்.

A first curfew has been declared in the Ballarat area tonight as 423 people have been confirmed infected in Victoriaவிக்டோரியாவில் மிகப்பெரிய மருத்துவமனையான செயிண்ட் வின்செண்ட் மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து முன்கள பணியாளர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகளில் பணிபுரியும் 25000 நபர்களில் சுமார் 70% ஊழியர்கள், தடுப்பூசியை செலுத்திக்கொண்டாலும் இன்னும் பலர் பல்வேறு காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர். விடுபட்டவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசியை செலுத்த வெண்டும் என்றும், இல்லாவிட்டால் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் மருத்துவமனை எச்சரித்துள்ளது.

அதே போல குதிரைப்பந்தயம் மைதானங்களில் பணிபுரியும் ஊழியர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

Link Source: https://ab.co/3nzzAYs