Breaking News

ஆஸ்திரேலியாவில் ஐந்தாவது நபருக்கு புதிய வகை மைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி : தென்னாப்பிரிக்காவிலிருந்து நியூ சவுத் வேல்ஸ் வந்த 30 வயது பெண்ணுக்கு வைரஸ் பாதிப்பு

A fifth person in Australia has been diagnosed with a new type of Omicron infection. a 30-year-old woman from South Africa infected with the virus in New South Wales.

தென்னாப்பிரிக்காவிலிருந்து பரவத் தொடங்கிய புதிய வகை வைரசான ஒமைக்ரான் ஆஸ்திரேலியாவில் முதலாவதாக இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து நியூ சவுத் வேல்ஸ் வந்த 30 வயது பெண்ணுக்கு ஒமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அவர் உடனடியாக தனிமைப் படுத்தப் பட்டுள்ளார். இந்நிலையில் சிட்னி மற்றும் மத்திய கடற்பகுதிகளில் அவர் நேரம் செலவிட்டு உள்ளதாகவும் அந்த பகுதிகளில் அவர் சென்று வந்த இடங்கள் தொற்று பாதிப்புக்குரிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தோசை தடுப்பூசி செலுத்தி இருந்த பயணி ஒருவர் தோஹாவில் இருந்து விமானம் மூலமாக சிட்னி வந்த நிலையில் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனைகளில் புதிய வகை வைரஸ் ஒமைக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து விமானத்தில் பயணம் செய்த அனைவரையும் நெருங்கிய தொற்று தொடர்புகள் ஆக பரிசீலித்து அவர்கள் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்தியுள்ள நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

A fifth person in Australia has been diagnosed with a new type of Omicron infection. a 30-year-old woman from South Africa infected with the virus in New South Walesஇதேபோன்று மேலும் விமானத்தில் பயணம் செய்து வந்த இருவருக்கு வைரஸ் பாதிப்பு தொற்று இருப்பதாகவும் அவர்களது மரபணு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அது ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு தானா என்பதை உறுதி செய்ய காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஒமைக்ரான் தோற்று பாதிக்கப்பட்ட பெண் சென்று வந்த சிட்னி சூப்பர் மார்க்கெட் மற்றும் மத்திய கடல் பகுதிகளில் சில இடங்கள் அறிவிக்கப்பட்டு அங்கு சென்று வந்தவர்கள் தாமாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே தென் ஆப்பிரிக்கா போட்ஸ்வானா நமீபியா ஜிம்பாப்வே, ஷீஷெல்ஸ் ஆகிய பகுதிகளிலிருந்து ஆஸ்திரேலியா வருபவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி ஹோட்டல்களில் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்றும், 72 மணி நேரத்தில் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சுகாதாரத் துறையின் விதிகளை மீறுவோருக்கு தனி நபருக்கு 5 ஆயிரம் டாலரும் நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் டாலரும் அபராதத்தை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் போதுமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருவதாகவும், மாகாணத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களை உடனடியாக தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் ப்ரீமியர் Dominic Perrottet கூறியுள்ளார்.

Link Source: https://bit.ly/3xKmXMY