Breaking News

அமெரிக்காவில் காட்டுத்தீ பரவலுக்கு காரணமான தம்பதி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

A couple has been charged with causing a wildfire in the United States

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் Refugio Manuel Jimenez Jr மற்றும் Angela Renee Jimene தம்பதியினர், கடந்தாண்டு தங்கள் குழந்தையின் பாலினத்தை உறவினர்களுக்கு தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி சான் பெர்னான்டினோ மலை அடிவாரத்திலுள்ள எல் டோரோடா ரான்ச் பூங்காவில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியையொட்டி பூங்காவில் செயற்கை புகையை உருவாக்கும் இயந்திரத்தையும் தம்பதிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த இயந்திரம் தரையில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

A couple has been charged with causing a wildfire in the United States.இந்த இயந்திரத்தை இயக்கிய போது வெளியேறிய தீ அருகில் இருந்த செடிகளுக்கும் பரவியுள்ளது. உடனடியாக அங்கிருந்த குடிநீர் கேன்களை கொண்டு தீயை அணைக்க தம்பதிகள் முயன்றுள்ளனர். ஆனால் பூங்காவில் அதிகளவில் காய்ந்த புற்கள் இருந்ததாலும், காற்று வேகமாக வீசியதாலும் தீ மளமளவென்று பரவியது.

உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தம்பதிகள் புகாரளித்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் எவ்வளவோ போராடியும், சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவிற்கு காடுகள் முற்றிலுமாக எரிந்த நாசமாகின.

செப்டம்பர் 5 ஆம் தேதி ஏற்பட்ட தீ , நவம்பர் வரை எரிந்ததாகவும், இந்த பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் மோர்டன் என்பவரும் தீயில் சிக்கி உயிரிழந்ததாகவும் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்தில் 15 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும், ஏராளமான கட்டிடங்களும், 5 வீடுகளும் சேதமடைந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தீ விபத்தால் சான் பெர்னான்டினோ வனப்பகுதியில் 92 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு காட்டுத் தீ பரவியது.

இந்நிலையில் இந்த தீ விபத்துக்கு காரணமான Refugio மற்றும் ஏஞ்சலா தம்பதி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/36Pyv5f