Breaking News

பூர்வக்குடி பெண் உயிரிழந்த விவகாரத்தில் கோரோனர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

A coroner's inquiry has been ordered into the death of an aboriginal woman.

மெல்போர்ன் பகுதியில் உள்ள டேம் பில்லீஸ் பிராஸ்ட் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 30 வயது நிரம்பிய பூர்வக்குடி பெண் கடந்த வாரம் சன்சைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒருவாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் அண்மையில் மரணமடைந்தார்.

பூர்வக்குடி பெண் மரணமடைந்த விவகாரத்தை கோரோனர் விசாரிப்பார் என்றும், 28 நாட்களில் இவ்விசாரணை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விக்டோரியா சிறை மற்றும் சீர்திருத்த துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த வாரம் சன்சைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூர்வக்குடி பெண், தன்னுடைய உறவினர்கள் முன்னிலையில் மருத்துவமனையிலேயே உயிரிழந்ததாகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A coroner's inquiry has been ordered into the death of an aboriginal woman பூர்வக்குடி பெண்ணின் மரணம் ஒரு துயரச் சம்பவம் என்று தெரிவித்துள்ள விக்டோரியா சிறைத்துறை, பெண்ணின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சிறை கைதிகளின் மரணம், குடும்பங்களின் மீது என்ன மாதிரியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தங்களால் புரிந்துக்கொள்ள முடிவதாகவும், பூர்வக்குடி பெண் மரணமடைந்த விவகாரத்தில் தேவையான உதவிகளை வழங்க தாங்கள் தயாராக உள்ளதாகவும் சிறைத்துறை தெரிவித்துள்ளது. பூர்வக்குடி நீதிபதி காக்கஸ், விக்டோரியா சிறைத்துறை, மற்றும் பர்ஸ்ட் பீப்புள் அசெம்பிளி ஆப் விக்டோரியா அமைப்பு இந்த விவகாரத்தில் ஒன்றிணைந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தற்போது துயரத்தில் இருந்து மீள அவகாசம் தேவைப்படுவதால், 28 நாட்களுக்குள்ளாக கொரோனர் விசாரணையை தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பிரிதிநிதியாக விக்டோரிய பூர்வக்குடிகளுக்கான சட்ட சேவை அமைப்பின் நிர்வாகி ஜார்ஜ் செல்வரேனா ஆஜராவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற மோசமான ஒரு நிலை யாருக்கும் ஏற்படக்கூடாது என்று தெரிவித்துள்ளார். உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் பூர்வக்குடி பெண் உயிரிழப்பது இது இரண்டாவது நிகழ்வு ஆகும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பர்ஸ்ட் பீப்புள் அசெம்பிளி நிர்வாகி Taungurung man Marcus Stewart, இது மிக துயர சம்பவம் என்று தெரிவிக்கும்,அவர் பூர்வக்குடி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கொள்கையளவில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டிய காலம் வந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தற்போது நடக்கும் நிகழ்வுகளை முற்றிலும் ஏற்க முடியாது என்றும் தெரிவிக்கிறார்.

Link Source: https://ab.co/32Mwms1