Breaking News

அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்திக்கண்ட 70 வயது முதியவர் இரத்த உறைதல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.

A 70-year-old man who was vaccinated with astrazeneca has been diagnosed with thrombosis.

தாஸ்மானிய பகுதியை சேர்ந்த Garry மற்றும் மேரி ஆகிய இருவரும் கடந்த மாதம் அஸ்ட்ரா ஜெனிகா முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கண்டனர்.

மேரிக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாத நிலையில், Garryக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட 7 நாட்களுக்கு பிறகு தனக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை உணர்ந்துள்ளார்.

உடனடியாக தான் மருத்து மனைக்கு செல்ல வேண்டியதன் அவசியம் குறித்தும் Garry தன்னுடைய குடும்பத்தினரிடம் எடுத்துரைத்தார்.

A 70-year-old man who was vaccinated with astrazeneca has been diagnosed with thrombosis,.கடும் வயிற்று வலியுடன் அனுமதிக்கப்பட்ட அவர், பிறகு மாவட்ட மருத்துவமனையில் இருந்து லான்ஸ்டேன் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தடுப்பூசியால் இரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்ப்பட்டதை கண்டறிந்துள்ளனர்.

மேலும் தடுப்பூசியால் மிக அரிதாக ஏற்படும் பக்க விளைவான thrombocytopenia syndrome (TTS) பாதிப்பு அவருக்கு ஏற்பட்டதை கண்டறிந்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த இரத்தவியல் நிபுணர் Huyen Tran, தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளை காண்டறிவதிலும், அதற்கு சிகிச்சையளிப்பதிலும் போதிய அனுபவம் பெற்றுள்ளதாகவும் ஹூயேன் தெரிவித்துள்ளார்.

இரத்தம் உறைதல் பாதிப்பால் இதுவரை ஆஸ்திரேலியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 62 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இது வரை ஆஸ்திரேலியாவில் சுமார் 42 லட்சம் பேருக்கு அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

A 70-year-old man who was vaccinated with astrazeneca has been diagnosed with thrombosisஅண்மையில் ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை நிபுணர் குழு வழங்கிய ஆலோசனையை ஏற்றுக்கொண்ட அரசு 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியும், 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசியும் செலுத்த ஒப்புதல் வழங்கியது. அரசின் இந்த முடிவு மக்களின் நலன் காக்கவும், தடுப்பூசி மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கவும் எடுக்கப்பட்டிருந்தாலும், 60 வயதுக்குட்பட்டவர்கள் தற்போது அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.

இதனால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதாக மருத்துவர் ஜெமால் ரபி தெரிவித்துள்ளார்.

அதே நேரம் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் 1 லட்சம் பேரில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 1.6 பேருக்கும், 60 வயதுக்கு உட்பட்டவர்களில் 2.6 பேருக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

scoot morrisonஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் 60 வயதுக்கு உட்பட்டவர்களும் தாங்கள் விரும்பினால் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய நிபுணர் குழுவில் இடம்பிடித்துள்ள பேராசிரியர் கேட்டி பிளாங்கன், கூறுகையில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி முக்கிய பங்காற்றுவதாகவும், தடுப்பூசி செலுத்தாத போது இருக்கும் ஆபத்து மிக அதிகம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் அந்த அபாயம் பெருமளவு குறைவதாகவும் பேராசிரியர் குறிப்பிடுகிறார்.

A 70-year-old man who was vaccinated with astrazeneca has been diagnosed with thrombosis.,அஸ்ட்ரஜெனிகா தடுப்பூசி மெல்போர்னில் உற்பத்தி செய்யப்படும் நிலையில், பைசர், மாடர்னா போன்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் தயக்கம் காட்டக்கூடாது என்று இரத்தம் உறைதல் பாதிப்பில் இருந்து மீண்ட கேரி வலியுறுத்தியுள்ளார்.

Link Source: https://ab.co/3w9BNdy