Breaking News

சீனாவில் 10 வயது சிறுவன் ஒருவன் 66 மில்லியன் வருடங்கள் பழமையான டைனோசர் முட்டையை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

A 10-year-old boy has discovered a 66 million year old dinosaur egg in China.

குவாங்டங் மாகாணதில் உள்ள ஹேயூன் நகரத்தை சேர்ந்தவர் 10 வயதான Zhang Yangzhe இவர் டாங் ஆற்றங்கரையோரம் வழக்கமாக தன் விளையாடக்கூடிய பகுதி ஒன்றில் தன்னுடைய அம்மாவின் மேற்பார்வையில் விளையாடிக் கொண்டிருந்தார்.

சிறுவயது முதலே அறிவியல் மீதும் டைனோசர்கள் மீதும் ஆர்வம் கொண்டிருந்த இந்த 10 வயது சிறுவன் Zhang Yangzhe, ஆற்றங்கரையோர பகுதிகளில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்கே புதையுண்டு கிடந்த சிமெண்ட் போல ஒரு பொருளை கண்டறிந்துள்ளார்.

முதலில் அது சிமெண்ட் கலவை ஆக இருக்குமோ என்று எண்ணியவாறே அதற்கு சேதம் ஏற்படாதவாறு மெல்ல மெல்ல அதன் சுற்றிலும் இருக்கக்கூடிய மண்ணை அப்புறப்படுத்தி உள்ளார். அந்தப் பொருள் மீது கருப்பு நிறத்தில் வளையங்கள் இருப்பதையும் அந்த சிறுவன் கண்டறிந்துள்ளார்.

A 10-year-old boy has discovered a 66 million year old dinosaur egg in Chinaபிறகு முழுவதுமாக மண்ணை அப்புறப்படுத்தி விட்டு தன் தாயாரை அழைத்து, அந்த பொருளை காண்பித்துள்ளார். முட்டை போன்ற வடிவிலான அந்த பொருளை கண்டதும் ஆச்சரியம் அடைந்த அந்த சிறுவனின் தாயார், உடனடியாக அந்த நகரத்தில் உள்ள சீன தொல்பொருள் ஆராய்ச்சி அதிகாரிகளுக்கும், அருங்காட்சியக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்து சேரும் வரை சிறுவனும் அவருடைய தாயாரும் அந்த இடத்திலேயே அப்பொருளை பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளனர்.

சிறிது நேரம் கழித்து அந்த பகுதிக்கு வந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த சிறுவன் கண்டுபிடித்தது டைனோசர் முட்டை என்று அது பல வருடங்களாக பூமிக்கு அடியில் புதையுண்டு கிடந்ததால் அது ஒரு படிமமாக மாறி இருப்பதையும் கண்டறிந்தனர்.

டாங் ஆற்றுப் பகுதியில் டைனோசர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. குறிப்பாக டைனோசர்களின் முட்டை படிமங்களும், படிமங்களாக மாறிய எலும்புகளும் கட்டிட பணியின்போது கிடைத்துள்ளன. இதன் காரணமாக இந்த பகுதி டைனோசர் வாழ்விடமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது .

A 10-year-old boy has discovered a 66 million year old dinosaur egg in China.,ஆனால் இந்த சிறுவன் கண்டறிந்து இருக்கக்கூடிய இந்த முட்டையானது 66 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் முட்டை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது Zhang, கண்டுபிடிப்பின் பலனாக அந்த பகுதியில் மேலும் சில இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது இதேபோன்று பத்து டைனோசர் முட்டை படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தொல்பொருள் அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குனர்.

Huang Ding, இந்த டைனோசர் முட்டையானது Cretaceous காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று இந்த பகுதியில் ஏராளமான டைனோசர்கள் வாங்கி இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
சிறுவன் கண்டெடுத்த இந்த அறிய கண்டிப்பை சில வருடங்கள் கழித்து அருங்காட்சியகத்தில் பார்க்க நேரும் போது நிச்சயம் அந்த சிறுவனும் அவருடைய சந்ததியும் மனநிறைவு கொள்ளும் வகையில் இந்த கண்டுபிடிப்பு அமைந்திருப்பதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://bit.ly/3jGx93F