Breaking News

ஆஸ்திரேலியா வழங்கிய ரோந்து கப்பல்களில் கோளாறு- கதறும் பசிபிக் நாடுகள்..!

ஆஸ்திரேலியாவிடம் இருந்து வாங்கப்பட்ட ரோந்து கப்பல்களில் கடுமையான குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, அவற்றின் பயன்பாட்டை பசிபிக் தீவு நாடுகள் நிறுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trouble in the patrol ships provided by Australia - the Pacific countries are crying..!

பசிஃபிக் தீவுகளில் அமைந்துள்ளா பப்புவா நியூ ஜெனிவா, துவாலு, டாங்கோ, சாமவோ, ஃப்ஜி, பாலாலு மற்றும் கிரிபத்தி ஆஸ்திரேலியாவின் நட்புறவு நாடுகளுக்கான பட்டியலில் உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கார்டியன்-கிளாஸ் ரோந்து கப்பலை பப்புவா நியூ ஜெனிவாவுக்கு ஆஸ்திரேலியா வழங்கியது.

அதை தொடர்ந்து மற்ற பசிபிக் நாடுகளுக்கும் அதே ரோந்து கப்பல்களை ஆஸ்திரெலியா வழங்கியது. சமீபத்தில் சாலமன் தீவு நாட்டுக்குள் சீனா பாதுகாப்பு ஒத்திகை மேற்கொண்டதை அடுத்து, அங்கும் இரண்டு கப்பல்களை ஆஸ்திரேலியா வழங்கியது. இதுவரை மொத்தமாக 15 கப்பல்களை ஆஸ்திரேலியா பசிபிக் நாடுகளுக்கு வழங்கியுள்ளது.

Trouble in the patrol ships provided by Australia - the Pacific countries are crying..சுமார் 2.1 பில்லியன் மதிப்பீட்டில் இதற்கான திட்டங்களை வகுத்து ஆஸ்திரேலியா அரசு செயல்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட சில நாடுகள் கப்பல்களின் பயன்பாட்டை நிறுத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளன. எஞ்சின் கோளாறு மற்றும் கியர் பாக்ஸ் பயன்பாட்டில் பிரச்னை போன்றவற்றால் பெரும்பாலான பசிபிக் தீவு நாடுகள் கார்டியன்-கிளாஸ் ரோந்து கப்பல்களை கைவிட்டுவிட்டதாக தெரியவந்துள்ளது. கடந்த மே மாதம் கப்பல்களின் புகை உமிழ்வு பகுதியில் கடுமையான குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. அதன்வழியாக கப்பலுக்குள் கரியமில வாயு உட்புகுந்துள்ளது. இதனால் கப்பல் பணியாளர்கள் பலர் உடல்நல பாதிப்புகளை சந்தித்துள்ளனர். இதையடுத்து கார்டியன்-கிளாஸ் ரோந்து கப்பல்களால் ஏற்படும் கோளாறுகளை ஆஸ்திரேலிய அரசு கவனத்துக்கு பசிபிக் நாடுகள் கொண்டு சென்றன.

இதையடுத்து ஆஸ்திரேலிய அரசு இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அதிகாரிகள் விரைவில் பசிபிக் தீவு நாடுகளுக்குச் சென்று அனைத்து கப்பல்களையும் மதிப்பிடுவார்கள். நீண்ட கால தீர்வை முன்னிறுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.