Breaking News

தெற்கு Wollongong-ல் உள்ள Port Kembla கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட மூன்று பேர் பரிதாபமாக கடலில் மூழ்கி இறந்தனர் !

தெற்கு Wollongong-ல் உள்ள Port Kembla கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட மூன்று பேர் பரிதாபமாக கடலில் மூழ்கி இறந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து அந்த பகுதியில் பொதுமக்கள் வருவதை போலீசார் தடுத்து வருகின்றனர்.

Port Kembla, south of WollongonNSW மாநிலத்தின் Wollongong-ல் உள்ள Port Kembla கடல் பகுதியில் பாறைகளின் மீது அமர்ந்து மூன்று பேர் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது உயரமாக எழுந்த கடல் அலையில் மூன்று பேரும் அடித்து செல்லப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு பத்து மணி அளவில் நீரில் மூழ்கி இறந்தனர் என NSW போலீசார் தெரிவித்தனர்.  இதையடுத்து ஹெலிகாப்டர்கள் மற்றும் உள்ளூர் காவலர்களுடன் அவர்களை தேடப்பட்டு வந்த நிலையில், மூன்று பேரின் சடலங்களும் நீரில் இருந்து மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட மூன்று பேரில், 45 மற்றும் 49 வயதுடைய ஆண்கள் இருவரும் Green Valley பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் கூறியுள்ளனர் .

மற்றொருவர் Campsie-யைச் சேர்ந்த 69 வயதானவர் என தெரிகிறது. இதேபோல மேலும் இரண்டு பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதுபற்றி Acting Superintendent Gordon Dunlop செய்தியாளர்களிடம் கூறுகையில் , “கடலுக்கு மிக நெருக்கமாக யாரும் மீன் பிடிக்க வேண்டாம். ஏனென்றால் மக்கள் மீன் பிடிக்கும் இடத்தில் சில நேரங்களில் வானிலை மாற்றம் மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என்பதால் பாறைகளின் மேற்பரப்பில் இருப்பவர்களுக்கு மிக ஆபத்தானதாக மாறும். எனவே இந்த சம்பவத்தை அனைவரும் எச்சரிக்கையாக கருதி கவனமாக இருக்க வேண்டும், என்று கூறினார்.

மேலும், இது போன்ற சமயத்தில் போலீசார் எதையும் தாமதப்படுத்தாமல் சம்பவ இடத்திலேயே இருந்து அனைத்தையும் பார்த்து கொள்ளவோம் எனவும், மக்கள் சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் இப்படி சில ஆபத்துகள் இருப்பதை ஏற்றுக்கொள்ளவது வாழ்க்கையின் உண்மை என்றும், முடிந்தவரை அசம்பாவிதங்கள் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும், என்றும் கூறினார். இதனிடையே நீரில் மூழ்கியவர்களின் உடைமைகளை போலீசார் மீட்டு வருகின்றனர்.