Breaking News

மெல்போர்னில் போராட்டக்காரர்களின் நடவடிக்கை அதிகரித்ததன் காரணமாக 92 பேர் கைது : போராட்டம் காரணமாக தடுப்பூசி மையங்கள் 4 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிப்பு

92 arrested in protest over rising protests

மெல்போர்னில் முடக்கநிலை மட்டும் தடுப்பூசிக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அங்கு அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் காவல்துறை தொடர்ந்து கைது செய்ய வரும் நிலையில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த ஒருசில போராட்டக்காரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

92 arrested in protest over rising protests.மெல்போர்னில் கட்டுமானம், சுரங்கம், வனம் ஆகிய ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக மெல்பனில் முக்கிய சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உடனடியாக கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் காரணமாக அங்கு முக்கிய தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன அவை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. போராட்டக்காரர்களின் அடாவடித்தனம் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மிகவும் அவமதிப்பான செயல் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதனிடையே புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முடக்க நிலை கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஈடுபட்ட சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் விதிகளை மீறுவோரை கைது செய்வதற்கான உரிய கைது வாரண்ட்களையும் அவர்கள் பிறப்பித்துள்ளனர். ஆனாலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உடனடியாக முடக்கநிலை கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்றும், தடுப்பூசி விவகாரத்தில் தளர்வு ஏற்படுத்தவேண்டும் என்றும் கூறிவருகின்றனர். மெல்போர்னில் முக்கிய நகரங்கள் மற்றும் அரசின் ஊரக பிராந்தியங்கள் ஆகியவற்றில் கட்டுமான பணிகள் முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கும் தொழிலாளர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

92 arrested in protest over rising protests.,இதனிடையே போராட்டக்காரர்களை தடுத்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடும் போலீசார் அவர்களை மிகவும் கண்மூடித்தனமாக தாக்குவதாகவும் இது மிகவும் கண்டனத்திற்கு உரியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது நடவடிக்கையின் போது காவல்துறை அதிகாரி ஒருவர் போராட்டக்காரரை தாக்கும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. நகரின் அனைத்து செயல்பாடுகளையும் முடக்கும் வகையில் இது போன்று போராட்டத்தில் ஈடுபடுவது மிகவும் இழிவான நடவடிக்கைகள் என்று சுகாதாரத்துறை தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கான மருத்துவ சேவைகள் தொடரும் என்றும், உடனடியாக தடுப்பூசி தேவைப்படுவோருக்கு செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரிமியர் டேனியல் ஆன்ட்ரூஸ் என்று தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/2XOqXyP