குயின்ஸ்லாந்தின் Coolangatta பகுதியில் தனது பாட்டியுடன் வசித்து வந்த 9 வயதுச் சிறுமி Charlise Mutten, விடுமுறைக்காக தனது தாய் Kallista Mutten உடன் ப்ளு மவுண்டன் பகுதிக்கு சென்றுள்ளார். Shadforth Road பகுதியில் உள்ள வளர்ப்பு தந்தையான Justin Stein க்கு சொந்தமான எஸ்டேட் வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த வியாழன் அன்று பிற்பகலில் காணாமல் போன சிறுமியை காவல்துறையைச் சேர்ந்த 9 குழுக்கள் கடந்த 5 நாட்களாக தேடிவந்தது மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Colo ஆற்றுப்பகுதிக்கு அருகில் உள்ள Barrel பகுதியில் சிறுமி Charlise Mutten -ன் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் ஜிபிஎஸ் டேட்டா மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 31 வயதான Justin Stein என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் மரணத்தில் முழுமையாக தொடர்புடைய நபராக இவர் இருப்பார் என்றும், அடுத்த கட்ட விசாரணையில் இது தொடர்பான விவரங்கள் வெளிவரும் என்றும் காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட Barrel பகுதியில் தொடர்ந்து தடைய அறிவியல் துறையினர் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். சேகரிக்கப்படும் தடயங்களின் அடிப்படையில் விசாரணை இன்னும் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர் சிறுமி காணாமல் போனதற்கு முன்பாக எந்தெந்த பகுதிகளில் இருந்தார் என்பது தொடர்பான முழுமையான விபரங்கள் சேகரிக்கப்பட்டு அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் காவல் துணை ஆணையர்
David Hudson கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட நபர் 20 கிராம் Sandbag மற்றும் படகுக்கான எரிபொருளை வாங்கியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சிறுமியின் தாய் Kallista Mutten தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் விசாரணை நடத்த முடியாமல் காவல்துறையினர் தவித்து வருகின்றனர். அவர் உடல்நலம் தேறிய பின்னர் விசாரணை நடத்துவதற்கு மருத்துவர்கள் அனுமதிப்பார்கள் என நம்புவதாக காவல் துணை ஆணையர் David Hudson தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் நீண்ட நாட்களாக மனநிலை பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாக அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இடையில் வெளியே செல்வதற்கு அவர் விண்ணப்பிக்காத நிலையில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Link Source: https://ab.co/3GNX16Z