Breaking News

குயின்ஸ்லாந்தில் சமூக பரவல் மூலமாக மேலும் 9 பேருக்கு தொற்று உறுதி : டெல்டா வகை தொற்றுப் பரவல் மையங்களாக மாறும் பிரிஸ்பேன் பள்ளிகள்

அதிவேகமாக பரவி வரும் டெல்டா வகை வைரஸ் காரணமாக பெரும்பாலான பகுதிகள் தோற்று பரவல் மையங்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. Indooroopilly உயர்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட தொற்று பரவ காரணமாக 18 பேருக்கு டெல்டா வகை வைரஸ் பாதிப்பு உறுதியான நிலையில் இதனை அடுத்து பிரிட்டனில் உள்ள ஆறு பள்ளிகளில் சமூக பரவல் மூலமாக 9 பேருக்கு புதிதாக டெல்டா வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஊரகப் பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள முடக்க நிலை காரணமாக பல்வேறு மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்து வருவதாகவும், அதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக அனுமதிக்கப்பட்ட இடங்களே தற்போது தொற்று பரவல் மையங்களாக உருவெடுத்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

9 more confirmed by community outbreak in Queensland. Brisbane schools to become delta-type outbreaks,பிரிட்டனில் உள்ள பள்ளி ஒன்றில் கராத்தே வகுப்புக்காக சென்ற 3 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் அங்கு வந்த குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளனர். இது போன்று பல்வேறு பள்ளிகளிலும் தொற்றுப் பரவல் அதிகரித்து இருப்பதன் காரணமாக மிக வேகமாக பரவும் டெங்கு வைரஸின் தொற்று பரவல் மையங்களாக பிரிஸ்பேன் பள்ளிகள் மாறியுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 468 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போதுள்ள எண்ணிக்கையைவிட சோதனைகளை இரண்டு மடங்காக நடத்தப்போவதாகவும் அதே நேரத்தில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் கண்டறியப்பட்டால் அங்கு தொடக்கநிலை அறிவிப்பதில் தயக்கம் எதுவும் இல்லை என்றும் துணை பிரீமியர் Steven Miles கூறியுள்ளார்.

இதனிடையே குயின்ஸ்லாந்து சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளி ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோருக்கு சுகாதாரத்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி அவர்கள் தொற்று பரவும் மையங்களாக கண்டறியப்பட்டுள்ள பள்ளிகளுக்கு வந்து சென்றிருந்தால் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

9 more confirmed by community outbreak in Queensland. Brisbane schools to become delta-type outbreaks.பள்ளிகளில் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்பதால் மேலும் தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் துணை பிரீமியர் Steven Miles கவலை தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் அதிவேகமாக தோற்றுப் பரவல் ஏற்பட்டு வரும் நிலையில் முடக்க நிலைக்கு எதிராக போராட்டம் நடத்துவது சரியான அணுகுமுறை அல்ல என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

Link Source: https://ab.co/37eOeLh

leave a reply