Breaking News

பெர்த் மருத்துவமனையில் உயிரிழந்த 7 வயது சிறுமி ஐஸ்வர்யா : சிறுமியின் மரணத்துக்குப் பின் மன உறுதியை இழந்து விட்டதாக கூறும் மருத்துவர்கள்

7-year-old Aishwarya dies at Perth hospital. Doctors say she lost consciousness after her death

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்-ல் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் 7 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் பரவலாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சிறுமி உயிரிழப்புக்கு பின்னர் மருத்துவமனை பணியாளர்களான டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் தங்களது மன உறுதியை இழந்து விட்டதாக கூறியுள்ளனர். சிகிச்சைக்காக பெர்த் குழந்தைகளின் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சிறுமி ஐஸ்வர்யா இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பின்னர் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், கடுமையான காய்ச்சல் மற்றும் இதயத் துடிப்பு குறைபாடு காரணமாக சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே சிறுமி ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் மருத்துவமனை ஊழியர்கள் மீது குற்றம்சாட்டி உள்ளனர். சிறுமி உயிரிழப்புக்கு டாக்டர்கள், மற்றும் செவிலியர்களின் அதையே காரணம் என்றும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

7-year-old Aishwarya dies at Perth hospital. Doctors say she lost consciousness after her death.சிறுமி உயிரிழந்த குறிப்பிட்ட நாளன்று இரவு மருத்துவமனையில் இருந்த பணியாளர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு தாங்கள் பொறுப்பாகி இருப்பதாக கூறி வேலையை விட்டு செல்வதாகவும், மன உறுதியை இழந்து விட்டதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆஸ்திரேலிய மருத்துவ அசோசியேஷன் மருத்துவமனையில் நடத்திய விசாரணையில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே ஐஸ்வர்யா இறப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை மருத்துவமனை தாமதமாக வெளியிட்டதாகவும் ஆனால் இந்த அறிக்கைக்கு மீது ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் அக்கறை காட்டவில்லை என்றும் மேற்கு ஆஸ்திரேலியாவின் குழந்தைகள் நலச் சேவையின் தலைமை மருத்துவர் அரேஷ் அன்வர் கூறியுள்ளார்.

மருத்துவமனை ஊழியர்களின் கவனக்குறைவு திரும்பி உயிரிழப்புக்கு காரணம் என்று அறிக்கை வெளியான நிலையில் மற்றவர்களின் நலன் காக்கும் வேலையையே சேவையாக செய்து வரும் மருத்துவர்களை உளவியல் ரீதியாக கடுமையாக பாதிக்கும் வகையில், டாக்டர் அன்வரின் அறிக்கை அமைந்துள்ளதாக பெர்த் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.

மிகவும் விருப்பப்பட்டு இத்துறையை தேர்ந்தெடுத்த மருத்துவர்கள் செவிலியர்கள் பலரும் இன்று மருத்துவமனைக்கு வரவே அச்சப்படும் சூழல் உருவாகி உள்ளது மேலும் நாங்கள் மன உறுதியை முற்றிலும் இழந்து இருக்கிறோம் இந்த வேலையை விட்டு வெளியேறவும் சிலர் முடிவு செய்திருக்கிறார்கள் என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.

7-year-old Aishwarya dies at Perth hospital. Doctors say she lost consciousness after her death,.ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் வெளியிட்டுள்ள கடுமையான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அறிக்கைக்கு பின், பெற்றோர்களின் கவலைகளை கவனத்தில் கொண்டு அதை நிவர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், நோயாளியை காப்பாற்றுவதற்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சிறுமி உயிரிழந்த நாள் அன்று இரவு பணியில் இருந்த இரண்டு செவிலியர்கள் அனுபவம் அற்றவர்கள் என்றும் உரிய கவனத்தோடு செயல்பட்டு மருத்துவர்கள் தனது மகளை காப்பாற்ற வில்லை என்றும் சிறுமி ஐஸவர்யாவின் பெற்றோர்கள் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளனர்.

7-year-old Aishwarya dies at Perth hospital. Doctors say she lost consciousness after her death,இதனிடையே மேற்கு ஆஸ்திரேலியாவின் மருத்துவ கழகத்தின் தலைவர் ஆண்ட்ரூ மில்லர் சிறுமி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக பெர்த் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். மேலும் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றுவோருக்கு கூடுதல் கவனமும் அக்கறையும் அவசியமாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

கடுமையான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமி ஐஸ்வர்யா, இரண்டு மணி நேரத்தில் இதயத்துடிப்பு குறைந்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தொடர்ந்து நீதி கேட்டும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Link Source: https://ab.co/3ucfcwh