Breaking News

உக்ரைனின் Mykolaiv –ல் அரசு கட்டடங்கள் மீது குண்டு மழை பொழிந்ததில் 7 பேர் பலி : தலைநகர் கிவிவ் -ல் படைகளை குறைக்க உள்ளதாக ரஷ்யா தகவல்

7 killed in Ukraine bombing of government buildings in Mykolaiv. Russia says it intends to reduce troops in the capital, Kyiv

உக்ரைனின் தெற்கு பகுதி துறைமுக நகரமான Mykolaiv –ல் அரசின் நிர்வாகக் கட்டடம் மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 22 பேர் படுகாயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

7 killed in Ukraine bombing of government buildings in Mykolaiv. Russia says it intends to reduce troops in the capital, Kyiv.தாக்குதலில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெளியாகி உள்ள வீடியோ காட்சிகள் அதனை உணர்த்தும் வகையில் உள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்ய படைகள் துறைமுக நகரங்கள் அனைத்தையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாகவும், கருங்கடல் பகுதி உடனான தொடர்பை முற்றிலும் துண்டிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது.

இதனிடையே, உக்ரைன் தலைநகர் கிவிவ் பகுதியில் இருந்து படைகளை குறைப்பதாக ரஷ்யா உறுதி அளித்துள்தாக கூறப்பட்டது. ஆனால், படைகள் குறைப்பதாக அறிவித்து இருப்பது ஏமாற்று வேலை என்று அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி விரும்பியது. அந்நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு எட்டப்படவில்லை.

7 killed in Ukraine bombing of government buildings in Mykolaiv. Russia says it intends to reduce troops in the capital, Kyiv...இதற்கிடையே, இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இஸ்தான்புல் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செர்னிகிவ் நகரில் ராணுவ நடவடிக்கையை மிகத் தீவிரமாக குறைப்பதாக ரஷியா தெரிவித்தது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து ரஷ்ய படைகள் திரும்ப பெறப்படவில்லை. இடமாற்றம் தான் செய்யப்படுகிறது என பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். மேலும், கீவில் படைகள் குறைக்கப்படுவதாக ரஷிய அரசு அறிவித்திருப்பது ஏமாற்றும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

7 killed in Ukraine bombing of government buildings in Mykolaiv. Russia says it intends to reduce troops in the capital, Kyiv,.இதனிடையே பொதுமக்களை இலக்காக வைத்து தாக்குதலை நடத்தவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. துறைமுக நகரங்கள் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்ட நிலையில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனை அடுத்து ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது. 4 கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் அமைதிக்கான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இரு தரப்பிலும் சாதகமான நிலை ஏற்படும் பட்சத்தில் போர் முடிவுக்கு என்று நம்புவதாகவும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/36Fopav