Breaking News

விக்டோரியா மாகாணத்தில் 7 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா மாகாணத்தில் நேற்று நாளில் 11 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் விக்டோரியா மாகாணத்தில் மொத்தம் 26 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அண்மையில் மெல்போர்ன் பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டவர் பொது இடங்களுக்கு சென்றதால் இந்த பரவல் ஏற்பட்டு வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.

தொடர்பறிதல் நடவடிக்கை மூலமாக தொற்று மேலும் பரவாமல் தடுக்க விக்டோரியா மாகாண அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த மாகாண முதல்வர் ஜேம்ஸ் மெர்லினோ, தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

7-day lockdown has been declared in the state of Victoria.இந்த ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் ஜூன் 3 ஆம் தேதி இரவு 11:59 மணிக்கு முடிவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்பறிதல் முயற்சியின் மூலமாக சுமார் 10 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிக்கப்பட முகாந்திரம் இருப்பதாகவும் இதனால் இந்த சங்கிலித்தொடரை துண்டிக்க ஊரடங்கு அவசியம் என்றும் முதல்வர் ஜேம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஊரங்கு காலத்தில் ஒரு சில அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் தளவுர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி உணவு வினியோகத்துக்கும், அங்கிகரீக்கப்பட்ட பணியாளர்களும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதே போல் முதியோர் பராமரிப்பு பணிகளுக்கும் , உடற்பயிற்சி செய்யவும், தடுப்பூசி செலுத்தவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த காரணங்களுக்காக மட்டும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7-day lockdown has been declared in the state of Victoriaபள்ளிகள் மூடப்படும் என்றும், ஆனால் குழந்தை காப்பகங்களும், அங்கன்வாடி மையங்களும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பரவி வரக்கூடிய வைரஸ் வகை அதித்தீவிரமாக பரவி வருவதாகவும், இதன் தொடர்பை துண்டிப்பது அவசியம் என்றும் முதல்வர் மெர்லினோ தெரிவித்துள்ளார்.

மேலும் விக்டோரியாவில் 40 வயது முதல் 49 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மார்டின் போலி தெரிவித்துள்ளார்.
விக்டோரியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு 40,411 மாதிரிகள் பெறப்பட்டுள்ளது. சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3yDHxyO