Breaking News

மெல்போர்னின் கிரேட்டர் Shepparton மற்றும் Moorabool பகுதிகளில் 7 நாட்கள் முடக்க நிலை : கடுமையாக பின்பற்ற சுகாதாரத்துறை வலியுறுத்தல்

7-day freeze in Melbourne Greater Shepparton and Moorabool areas. Health Department urges strict adherence

வடக்கு, மேற்கு மெல்போர்னின் Shepparton மற்றும் Moorabool Shire பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் 7 நாட்களுக்கு முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது இங்கு ஏற்கனவே உள்ள முடக்க நிலையில் ஒரு பகுதியாகவே இது அறிவிக்கப்பட்டுள்ளதால் பழைய நடைமுறைகள் தொடரும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட பகுதிகளில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்படும் முடக்க நிலையை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தற்காலிக தலைமை சுகாதார அதிகாரி Ben Cowie கேட்டுக்கொண்டுள்ளார்.

Ballarat மற்றும் Geelong பகுதிகளில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மற்ற பகுதிகளில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்காமல் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதாரத்துறை தற்காலிக தலைமை சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

7-day freeze in Melbourne Greater Shepparton and Moorabool areas. Health Department urges strict adherence.ஒருநாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 500 லிருந்து 1438 ஆக அதிகரித்துள்ளது தொட்டு பரவல் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள பகுதிகளில் மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை மேற் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்துவதற்கான முக்கியத்துவத்தை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றும் தற்காலிக தலைமை சுகாதார அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அத்தியாவசிய பணியாளர்களுக்கான தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி போடும் சிறிய அளவிலான மையங்கள் அதிகம் உருவாக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மாடெர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகள் உடனடியாக கிடைக்கும் வகையில் அங்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அருகில் உள்ள சிறிய வகை தடுப்பூசி மையங்களில் உடனடியாக தடுப்பூசி பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

Link Source: https://bit.ly/3DeOWWZ