Breaking News

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் 66 வயது நபரை கொடூரமாக கொலை செய்த விவகாரம் : உயிரிழந்த நபரின் 36 வயது நண்பரை காவல்துறை கைது செய்து தீவிர விசாரணை

66-year-old man brutally murdered in Queensland, Australia. Police arrest 36-year-old friend of deceased

குயின்ஸ்லாந்து மாகாணத்தின் Innisfail நகரில் Fitzgerald பூங்காவில் 66 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாகவும் அவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு இருப்பதாகவும், காவல்துறைக்கு வந்த தகவலை அடுத்து அங்கு விரைந்த போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அவருடன் இணைந்து பூங்காவிற்கு வந்த முப்பத்தி ஆறு வயது நண்பர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட தாகவும், அவர் குயின்ஸ்லாந்ததை சேர்ந்த 66 வயது நபரின் கால்களை வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

66-year-old man brutally murdered in Queensland, Australia. Police arrest 36-year-old friend of deceased..அதிகாலை 4 மணியளவில் இருவரும் பூங்காவின் மரத்தினடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாகவும் ஆனால் அடுத்த அரைமணி நேரத்தில் இதுபோன்ற கொடூர சம்பவம் அரங்கேறி இருப்பதாகவும், 66 வயது முதியவரின் கால் வெட்டப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக நடைபயிற்சி சென்ற அவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் காவல்துறை தனது விசாரணையை தீவிரப்படுத்தியது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் 2 பேரும் நண்பர்களா அல்லது அவர்களுக்கு இடையிலான உறவு என்ன என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிட்ட சம்பவத்தின் விசாரணை அதிகாரி ஆய்வாளர் Gary Hunter கூறியுள்ளார்.

கொலை செய்யும் நோக்கத்தோடு முதியவரை தாக்கிய அந்த நபர் கால்களை வெட்டி அதற்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை என்றும் புலனாய்வுப்பிரிவு அதற்கான விசாரணையை தீவிரப்படுத்தி இருப்பதாகவும் விசாரணை அதிகாரி Gary Hunter கூறியுள்ளார்.

இது மிகவும் மோசமான மற்றும் கொடூரமான கொலை சம்பந்தமாக இருப்பதாகவும் தன்னுடைய காவல்துறை அனுபவத்தில் இது போன்று மோசமான நிகழ்வுகளை கண்டதில்லை என்றும் Gary Hunter தெரிவித்துள்ளார்.

Fitzgerald Park -ல் நடைபயிற்சி சென்ற நபர்கள் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மற்றும் தங்களது வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் காட்சிகள் ஏதேனும் பதிவாக இருந்தாலோ அல்லது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து சாட்சியங்களை அளிக்கலாம் என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Link Source: https://ab.co/3BB8G7m