Breaking News

மனநல அமைப்பை மாற்றியமைக்க 65 பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது !

விக்டோரியாவில் மனநல அமைப்பு நெருக்கடி நிலையில் செயல்படுவதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அமைப்பை மாற்றியமைக்க 65 பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக 50 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கும், அதற்கு மேற்பட்டவர்களுக்கும் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு வழங்கும் விதத்தில் செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

65 suggestions have been made to modify the mental healthநாடாளுமன்றத்தில், Royal commission chair Penny Armytage கூறுகையில், சீர்திருத்ததின் கீழ் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தும் முறைகள் நீக்கப்படும். இப்பொழுது உள்ள மனநல அமைப்பு மீளமுடியாத அளவிற்கு தோல்வியையும், தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை சந்திப்பதற்கு தயாராக இல்லை என்றார். மனநலம் மற்றும் ஆரோக்கியத்திற்காக New Mental Health and Well being Act உருவாக்கப்பட்டுள்ளது.

Daniel Andrews about mental healthவிக்டோரிய முதல்வர் Daniel Andrews கூறுகையில், இந்த அமைப்பு தோல்வியுற்றதை ஒப்புக் கொள்வதாகவும், அதை சீரமைக்க முயற்சிகள் எடுப்பதாகவும் கூறினார். மக்கள் மிகவும் முடியாத நிலையில் இல்லை. அவர்களுக்கு உதவுவதற்கு முன் அவர்களை விட்டு விலகி விடுகிறோம். அவர்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. விக்டோரியா மற்ற மாநிலங்களை விட ஒரு நபருக்கு குறைவாகவே செலவழிக்கிறது. இந்த மாற்றத்தால் மாநிலத்திற்கு அதிகளவில் செலவாகும். இது மக்களை நன்றாக வைத்திருப்பது, அவர்களை காப்பாற்றுவது என்றார்.

Commission witness Lucy Barker தனக்கு ஏற்பட்ட கவனக்குறைவான சிகிச்சை பற்றி கூறும்பொழுது, அடிபட்ட பின் அவசர சிகிச்சைக்கு சென்றேன். மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. ஆனால் மருத்துவர் எந்த மயக்க மருந்தும் இல்லாமல் அலட்சியமாக சிகிச்சை செய்தார் என்றார்.

Cohealth chief executive Nicole Bartholomeusz கூறுகையில், மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் பொழுது மனநோயாளியாகிறார்கள். அவசர சிகிச்சை பிரிவில் ஏற்படும் சத்தம், சிகிச்சைக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை போன்ற காரணங்களினால் மக்கள் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்கிறார்கள்.

Mental Health Victoria CEO Angus ClellandMental Health Victoria CEO Angus Clelland கூறுகையில், இந்த இறுதி அறிக்கையானது bold new vision for mental health என்ற சூழ்நிலையை உருவாக்கும். இதனால் விக்டோரியா மக்களின் உயிர்கள் காப்பாற்றப்படும் என்றார்.