Breaking News

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கொரொனா தொற்று பாதித்த 644 பேர் மருத்துவமனையில் அனுமதி : ஒரே நாளில் 21 ஆயிரத்து 728 பேருக்கு தொற்று பாதிப்பு

ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான மாகாணங்களில் கோவை தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக ஒரே நாளில் 72 ஆயிரம் பேர் வரை தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் விக்டோரியா மாகாணத்தில் வீடுகளில் இருந்தே ஆன்டிஜென் ரேபிட் பரிசோதனை மூலமாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பெரும்பாலானோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அந்த வகையில் ஒரே நாளில் 21 ஆயிரத்து 728 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளது.

நவம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை கோபி தொடர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வோரின் எண்ணிக்கை சராசரியாக அதிகரித்து வருகிறது அந்த வகையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை 644 ஆகவும், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை 48 பேரும் பெற்று வருகின்றனர்.

தொற்று பாதிப்பின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் விக்டோரியாவில் மேற்கொள்ளப்படும் 50 பரிசோதனைகளில் கட்டாயம் ஒருவருக்கு தொற்று பாதிப்பு என்கிற எண்ணிக்கையில் பதிவாகி வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மேற்கொள்ளப்பட்ட 68 ஆயிரம் பரிசோதனைகளில் 21 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மேலும் கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று விக்டோரியா ப்ரீமியர் தெரிவித்துள்ளார்.

644 infected with corona in Victoria, Australia hospitalized. 21,728 infected in one day.12 வயதுக்கு மேற்பட்ட 13 சதவீதம் பேர் மூன்று டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ள நிலையில், 5 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை இந்த வாரம் முதல் தொடங்க உள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் விக்டோரியா மாகாணத்தில் ஆஸ்திரேலிய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஆன்டிஜென் ரேபிட் பரிசோதனை கருவி மூலமாக வீட்டிலிருந்தே சோதனை மேற்கொண்டு அதை ஆன்லைன் வழியாக பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்காக சுகாதாரத்துறை பிரத்யேகமாக உருவாக்கியுள்ள இணையதளத்தில் ரேபிட் கருவி மூலமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனையை விவரங்களையும் பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பயணம் மேற்கொண்ட விபரம், தோற்று பாதித்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரம், மற்றும் தேவைப்படும் மருத்துவ சேவை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணைய தளத்தில் பதிவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே தொற்று பாதித்தவர்கள் உடன் தொடர்பில் இருந்த சுகாதாரப் பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீவிர அறிகுறிகள் எதுவும் தென்படாமல் இருக்கும் நிலையில் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் உரிய பரிசோதனை மேற்கொண்ட பின்னர் தொடர்ந்து அவர்கள் பணியாற்றுவதற்கான அனுமதியை வழங்கலாம் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Link Source: https://ab.co/3t5bebK