Breaking News

தமிழ்நாட்டில் எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம்-களில் ரூ.64 லட்சம் நூதனக் கொள்ளை : கொள்ளையர்களை தேடி ஹரியானா விரைந்தது தனிப்படை

64 lakh new robbery at SBI Bank ATMs in Tamil Nadu. Haryana rushes in search of robbers

பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் SBI வங்கியின் ஈ- கார்னர் மையங்களில் பணம் செலுத்துவது, எடுப்பது, பாஸ் புக்கில் அச்சிடுவது போன்ற வசதிகள் உள்ளன. இந்த ஏடிஎம்களில் பணம் எடுத்த பின்னர் 20 நொடிகள் சென்சார் மற்றும் பணம் வரும் பகுதியில் கை வைத்து மறைத்து கொண்டால் பணம் எடுத்துவிட்ட பின்பும் அது மீண்டும் வங்கிக் கணக்கிற்கே சென்றுவிடும். இதே போன்று நூதன முறையில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் சென்னையின் பல்வேறு இடங்களில் 48 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடித்ததாக எஸ்பிஐ வங்கி தெரிவித்தது.

64 lakh new robbery at SBI Bank ATMs in Tamil Nadu. Haryana rushes in search of robbers,.வடபழனி, கீழ்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, தரமணி, விருகம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஏ.டி.எம் களில் கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது பெரியமேடு SBI ATM ல் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்களை பிடிக்க இரண்டு தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

64 lakh new robbery at SBI Bank ATMs in Tamil Nadu. Haryana rushes in search of robbers.மேலும் SBI டெபாசிட் மெஷின்களில் பணம் எடுக்கக்கூடாது SBI வங்கி தடை விதித்துள்ளது. இந்த நிலையில் பெரியமேடு SBI ATM ல் ரூ16 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே கீழ்ப்பாக்கம் அழகப்பா சாலை, தியாகராயநகர் ஏடிஎம்களில் இதே போன்ற நூதன கொள்ளை நடந்துள்ளதாக வங்கி கிளை மேலாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதே நேரம் இவை பொதுமக்களின் பணம் அல்ல என்றும் வங்கியின் பணம் என்றும் எஸ்பிஐ வங்கி விளக்கம் அளித்துள்ளது.

பெரும்பாலும் ஆன்லைன் பொருளாதார குற்றங்களில் அதிகம் ஈடுபடும் நபர்களில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். அவர்கள் ஏடிஎம்களில் இது போன்ற நூதன திருட்டை அரங்கேற்றி 64 லட்சம் வரை கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Link Source: https://bit.ly/3zSsd20