Breaking News

பெல்ஜியம் கார்னிவல் விழாவில் கூட்டத்திற்குள் கார் புகுந்து விபத்து : 6 பேர் பலி 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி

6 killed, more than 10 injured in car crash at Belgium carnival

தெற்கு பெல்ஜியம் கிராமமான Strepy-Bracquegniesல் நடைபெற்றுக் கொண்டிருந்த கார்னிவல் விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்று இருந்தனர் அந்த விழா பேரணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதி வேகமாக வந்த கார் ஒன்று கூட்டத்திற்குள் புகுந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

6 killed, more than 10 injured in car crash at Belgium carnival.200 பேர் வரை பங்கேற்று இருந்த அந்தப் பேரணியில் அதி வேகமாக வந்த கார் புகுந்ததில் ஏராளமானோர் இந்த நெரிசலில் சிக்கித் தவித்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்திவரும் காவல்துறையினர் இந்த விவகாரத்தில் தீவிரவாத தாக்குதல் திட்டம் எதுவும் இல்லை என்றும் கார் மோதி விபத்து ஏற்படுத்திய நபர் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளனர். ஒரே நேரத்தில் இரண்டு கார்களுக்கு இடையே நடைபெற்ற சேசிங் சம்பவத்தின் போது இந்த கார் கூட்டத்திற்குள் புகுந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியையும் காவல்துறையினர் மறுத்துள்ளனர்.

தெற்குப் பிரசல்ஸ் க்கு 50 கிமீ அருகில் உள்ள Strepy-Bracquegnies கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில் தொற்று காரணமாக கார்னிவல் விழா நடைபெறாத நிலையில் கடந்த ஞாயிறு அன்று இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது பேரணிக்கு தயாராக மக்கள் குழுமி இருந்த நிலையில் கூட்டத்திற்குள் கார் புகுந்து விபத்து நடைபெற்றதாக La Louviere நகர மேயர் Jacques Gobert தெரிவித்துள்ளார்.

கூட்ட நெரிசலுக்குள் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காரில் இருந்த இரண்டு பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இவர்கள் இதற்கு முன்னர் எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபடாத நபர்கள் என்று தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இருவருக்கும் சராசரியாக 30 வயது கொண்டவர்கள் என்றும் கடந்த ஆண்டுகளில் வேறு ஏதேனும் அமைப்புகளோடு தொடர்புடைய நபர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது மிகவும் கொடூரமான விபத்து என்றும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் பெல்ஜியம் உள்துறை அமைச்சர் Annelies Verlinden கூறியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற இதேபோன்ற விபத்தில் 150 பேர் வரை உயிரிழந்தனர். அதற்குப் பின்னர் 2016 ஆம் ஆண்டு பிரசல்ஸ்சில் நடைபெற்ற விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர். இந்த இரு விபத்துக்கும் பிரசல்ஸ்சை மையமாகக் கொண்ட இஸ்லாமிய அமைப்புகள் காரணமாக இருந்ததாகக் கூறப்பட்டது.

Link Source: https://ab.co/3JsXTzt