Breaking News

ஆஸ்திரேலியாவின் ஒரு சில பகுதிகளில் ரிக்டர் 6.0 அளவில் நிலநடுக்கம் உணர்வு : நிலநடுக்கத்திற்கு எப்படி தயாராக வேண்டும் என்பது குறித்து ஆஸ்திரேலிய புவியியல் நிபுணர்கள் கருத்து

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி, கன்பரா வடக்கு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி மெல்போர்ன் நகரத்தில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் Mansfield என்ற இடத்தில் மையம் கொண்டிருந்ததாக Geoscience ஆஸ்திரேலியா கூறியுள்ளது.

6.0 magnitude earthquake shakes parts of Australia. Australian geologists comment on how to prepare for an earthquake..நில நடுக்கம் ஏற்பட்ட பின்னர் ஏற்படும் Aftershock என்ற இரண்டாவது நடுக்கம் 4.0 அளவில் என்று பதிவாகி உள்ளதாக Geoscience Australia மேலும் கூறியது. சிட்னி, கன்பரா மற்றும் விக்டோரிய மாகாணத்தின் பல பிராந்திய இடங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கங்களை மக்கள் அனுபவித்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

சுனாமி அல்லது பேரிடர் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அளவிற்கான பெரிய நிலநடுக்கம் இல்லை என்றும், ஆனால் நாம் தயாராக வேண்டியது அவசியம் என்றும் புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை தாங்கள் இத்தனை சக்தி வாய்ந்த நில நடுக்கத்தை உணர்ந்த தில்லை என்றும், ஆனால் இது எந்தவிதமான உயிர் சேதங்களை ஏற்படுத்தவில்லை என்றும் சுனாமியை உணர்ந்த மக்கள் சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளனர்.

6.0 magnitude earthquake shakes parts of Australia. Australian geologists comment on how to prepare for an earthquake.,.குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் நிலநடுக்கம் தொடர்பான செய்தியை தான் கேட்டு அதிர்ச்சி உற்றதாகவும், இதுவரை எந்தவிதமான உயிரிழப்பு தொடர்பான அறிக்கையையும் தனக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளார் மேலும் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை களுக்கு அரசு என்றும் துணை நிற்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் Newcastle என்ற இடத்தில் 1969ஆம் ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானது. அப்போது 13 பேர் வரை உயிரிழந்தனர்.

6.0 magnitude earthquake shakes parts of Australia. Australian geologists comment on how to prepare for an earthquake.,.,இந்நிலையில் கடலுக்கு அடியில் உள்ள பாறைகள் ஆஸ்திரேலியாவின் சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் நெருக்கமாக உள்ளதாகவும், அவை மோதும் போது இது போன்ற நில நடுக்கம் ஏற்படுவது இயல்பானது என்றும் புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சுனாமி அல்லது அதிக அளவிலான நில நடுக்கத்திற்கு நாம் தயாராக வேண்டும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Link Source: https://ab.co/3kt5nIs