Breaking News

விக்டோரியாவின் Mansfield-ல் 5.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் : இரண்டு தங்க சுரங்கங்கள் முழுவதும் அதிர்வை உணர்ந்ததாக தொழிலாளர்கள் தகவல்

5.9 magnitude earthquake shakes Mansfield, Victoria. Workers report shock across two gold mines

கடந்த செவ்வாயன்று விக்டோரியாவின் வடகிழக்கு நகரமான Mansfield-ல் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானது. இந்நிலையில் நிலநடுக்கத்திற்கு பிறகு Aftershocks மூன்று முறை பதிவான நிலையில் அவையும் 5.8 ஆக பதிவானது.

5.9 magnitude earthquake shakes Mansfield, Victoria. Workers report shock across two gold mines.இந்த நிலநடுக்கத்தில் Mansfield நகரத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இரண்டு தங்கச் சுரங்கங்கள் முழுவதுமாக அதிர்வை உணர்ந்துள்ளன. நிலத்துக்கு அடியில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் கடுமையான அதிர்வை உணர்ந்ததாகவும் மற்றொரு சுரங்கத்தில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதாகவும் அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் காரணமாக உடனடியாக பூமிக்கு அடியில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் வெளியேற்ற பட்டதாகவும், தற்காலிகமாக சுரங்கப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுரங்க இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிர்வுகள் வேகமாக இருந்தபோதும் எந்த விதமான சேதமும் சுரங்கத்தில் ஏற்படவில்லை என்றும், யாருக்கும் எந்தவிதமான காயமோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்றும் சுரங்கத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

5.9 magnitude earthquake shakes Mansfield, Victoria. Workers report shock across two gold mines,இதே போன்று Epicenter உயிரியல் பூங்காவிலும் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது ஆனால் விலங்குகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் இருக்குமாறு பூங்கா ஊழியர்களை அறிவுறுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நில நடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து மூன்று முறை ஏற்பட்ட Aftershocks காரணமாக மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும், இதுகுறித்து புவியியல்யல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Link Source: https://ab.co/3CGBWZD