குயின்ஸ்லாந்து மாகாணத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்கு ஒரே நாளில் 4 ஆயிரத்து 707 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 19 பேர் உயிரிழந்து விட்டதாகவும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் Check in App பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக ப்ரீமியர் Annastacia Palaszczuk தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் 10 பேர் முதியோர் பராமரிப்பு மையங்களில் இருந்ததாகவும் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போடாமல் இருந்தவர்கள் என்றும் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் தலைமை சுகாதார அதிகாரி John Gerrad தெரிவித்துள்ளார். முதியோர் பராமரிப்பு மையங்களில் உயிரிழந்தோர் பெரும்பாலும் வயது மூப்பு காரணம் மற்றும் இணை நோய்கள் காரணமாக உயிரிழந்ததாகவும் கோவிட் தொற்று அவர்களுக்கு காரணமாக பெரும்பாலும் இல்லை என்று தலைமை சுகாதார அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
அதே நேரத்தில் தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்து படிப்படியாக குறையத் தொடங்கி இருப்பதாகவும் அது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையைப் பொருத்து வெளிப்படுவதாகவும் ப்ரீமியர் Annastacia Palaszczuk கூறியுள்ளார். தற்போது மருத்துவமனைகளில் 663 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 43 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கடை வீதிகள், டாக்சிகள், தங்குமிடங்களில் பயன்படுத்தப்படும் Check in App தற்போது பயன்படுத்த தேவையில்லை என்றும் அதற்காக தடை விதிக்கப்படுவதாக பிரீமியர் Annastacia Palaszczuk அறிவித்துள்ளார். இந்நேரத்தில் Pub, கிளப் மற்றும் உணவகங்களுக்கு செல்வோர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக Check in செய்ய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
கடந்த வாரங்களில் உச்சத்தில் இருந்த தொற்று பாதிப்பு தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி இருப்பதாகவும் இதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக முதியோர் பராமரிப்பாளர்கள், குழந்தைகள் பராமரிப்பாளர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
Link Source: https://ab.co/3uyfYqV